BUSINESS

செல்லப்பிராணிகளுக்கான இன்சூரன்ஸ் பற்றி தெரியுமா?- இதனை எப்படி பெறுவது?

“செல்லப்பிராணிகள் மனிதர்களின் சிறந்த நண்பர்கள்” என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு தான் அதனுடைய முழு அர்த்தமும் புரியும். செல்லப்பிராணிகள் நம் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அளவு கடந்த அன்பை செலுத்தக்கூடியவை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் நம்முடைய அன்பும், அரவணைப்பும் தான். இப்படிப்பட்ட செல்லப் பிராணிகளின் ஆரோக்கியம் மற்றும் நலன் என்று வரும்போது நாம் ஒரு சில கூடுதல் முயற்சிகளை ஏன் எடுக்கக்கூடாது? அதற்கான சிறந்த ஆப்ஷன் பெட் இன்சூரன்ஸ் (Pet Insurance). பெட் இன்சூரன்ஸ் என்பது பல்வேறு விதமான விலங்குகளை பாதுகாப்பதற்கு உதவும் ஒரு சிறப்பு வகை இன்சூரன்ஸ் பாலிசி. இது கிட்டத்தட்ட நமக்கு நாம் ஹெல்த் இன்சூரன்ஸ் வாங்குவது போல தான். செல்லப்பிராணிகளை வளர்ப்பது சாதாரண காரியம் அல்ல. அவைகளுக்கான தடுப்பூசிகள், உண்ணி சிகிச்சைகள், மெருகேற்றுதல் மற்றும் பிற பராமரிப்பு போன்றவை ஒரு வருடத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.54,000 வரை ஆகலாம். இதற்கு இடையில் அவர்களுக்கான மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை செலவுகளின் விலை அதிகமாக இருக்கும். பெட் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் எடுத்துவிட்டால் எதிர்பாராத சூழ்நிலைகளில் உங்களுக்கு சிறந்த மருத்துவ மற்றும் சட்டரீதியான ஆதரவு கிடைக்கும். பெட் இன்சூரன்ஸ் பெறுவதால் கிடைக்கும் பலன்கள் உங்களுடைய செல்லப்பிராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ அல்லது அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டாலோ அதற்கான பொருளாதார பாதுகாப்பை பெட் இன்சூரன்ஸ் வழங்குகிறது. எதிர்பாராத சூழ்நிலையில் உங்களுடைய செல்லப்பிராணிக்கு விபத்து ஏற்பட்டால் அதற்கான பொருளாதார சுமையை இந்த பெட் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்கிறது. உங்களுடைய செல்லப்பிராணி மூன்றாம் தரப்பினர்கள் அல்லது அவர்களுடைய சொத்துகளுக்கு ஏதேனும் சேதங்களை ஏற்படுத்தும் பட்சத்தில் அதற்கான காப்பீட்டையும் இந்த பெட் இன்சூரன்ஸ் மூலமாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் செல்லப்பிராணியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு வழக்கமாக நீங்கள் செய்யக்கூடிய ஹெல்த் செக்கப் போன்றவற்றையும் இந்த பெட் இன்சூரன்ஸ் மூலமாக கிளைம் செய்யலாம். செல்லப் பிராணிகளுக்கான விலை உயர்ந்த சிறப்பு மற்றும் நவீன சிகிச்சைகள் போன்றவற்றிற்கான காப்பீட்டை பெட் இன்சூரன்ஸ் அளிக்கிறது. இன்னும் சில பெட் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஒருவேளை உங்களுடைய செல்லப்பிராணிகளை நீங்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றால் கூட அதற்கான காப்பீட்டையும் வழங்குகிறது. இதையும் படிக்க: பெண் பிள்ளை வைத்திருப்போர் கவனத்திற்கு.. ரூ.70 லட்சம் ரிட்டன் கிடைக்கும் இந்த திட்டம் தெரியுமா? பெட் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கிடைக்கும் காப்பீடுகள் 1. அறுவை சிகிச்சைச் செலவுகள் 2. விபத்து அல்லது நோய் காரணமாக இறப்பு 3. மருத்துவமனையில் அனுமதித்தல் காரணமாக ஏற்படும் செலவு 4. செல்லப்பிராணிகள் தொலைந்து போனாலோ அல்லது அவை திருடப்பட்டு விட்டாலோ அதற்கான இழப்பை பெற்றுக் கொள்ளலாம் பெட் இன்சூரன்ஸ் பாலிசியில் எந்தெந்த விஷயங்களை உங்களால் கிளைம் செய்ய முடியாது? 1. அவசியமற்ற அறுவை சிகிச்சைகள் 2. பிறவி குறைபாடுகள் 3. கர்ப்பம் சம்பந்தமாக செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் 4. செல்லப்பிராணிகளை அழகுப்படுத்துவதற்காக செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் 5. காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சைகள் 6. விபத்து காரணமாக ஏற்படாத பல் சம்பந்தமான அறுவை சிகிச்சைகள் இதையும் படிக்க: மாதம் 30,000 ரூபாய் முதலீடு செய்தால் 21 லட்சம் ஈட்டித்தரும் தபால் நிலையத்தின் RD திட்டம்!!! பெட் இன்சூரன்ஸ் பாலிசி பெறுவதற்கான தகுதி வரம்புகள் 2 மாதங்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான செல்லப்பிராணிகளுக்கு நீங்கள் பெட் இன்சூரன்ஸ் பெற்றுக் கொள்ளலாம். இந்த பெட் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் என்பது செல்லப்பிராணியின் வயது, அதன் வகை மற்றும் அளவை பொறுத்து அமையும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.