ENTERTAINMENT

ஹீரோ, ஹீரோயின் கிடையாது… 2024-ல் பட்ஜெட்டை விட 5 மடங்கு லாபம் சம்பாதித்த படம் இதுதான்!!

தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / ஹீரோ, ஹீரோயின் கிடையாது… 2024-ல் பட்ஜெட்டை விட 5 மடங்கு லாபம் சம்பாதித்த படம் இதுதான்!! ஹீரோ, ஹீரோயின் கிடையாது… 2024-ல் பட்ஜெட்டை விட 5 மடங்கு லாபம் சம்பாதித்த படம் இதுதான்!! பலரும் பாராட்டிய இந்த திரைப்படம் தற்போது நெட் ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கு சர்வதேச சினிமா ரேட்டிங் தளமான ஐ.எம்.டி.பி 8.4 புள்ளிகளை வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது . படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 19, 2024, 3:22 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு படம் நன்றாக ஓடுவதற்கு மிகப்பெரிய ஹீரோ ஹீரோயின் தேவையில்லை என்பதை சில படங்கள் நிரூபித்துள்ளன. நல்ல கதை அம்சம் கொண்ட விறுவிறுப்பான படங்கள் பட்ஜெட்டை விடவும் பல மடங்கு லாபம் சம்பாதித்து கொடுக்கின்றன. அந்த வகையிலான ஒரு இந்தி படம் தான் லாபட்டா லேடிஸ். இதற்கு காணாமல் போன பெண்கள் என்று அர்த்தம் கொள்ளலாம். ஆமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இந்த படத்தை குறைந்த பட்ஜெட்டில் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ஆஸ்கார் போட்டிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த படத்தில் இடம்பெற்ற யாரும் ரசிகர்களால் அறியப்படாதவர்கள். போலீஸ் அதிகாரியாக ஷியாம் மனோகர் கேரக்டரில் ரவி கிஷன் நடித்திருந்தார். மற்ற கேரக்டர்கள் யாரும் அதிக அனுபவம் இல்லாதவர்கள். போலீஸ் கேரக்டரில் முதலில் அமீர் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று கூறி இயக்குனர் கிரண் நீக்கிவிட்டார். இந்தத் திரைப்படம் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. கடந்த மார்ச் 1-ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தியேட்டர் ரிலீஸில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் 25 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராமத்தில் நடக்கும் இந்த கதையில் 2 பெண்கள் தாங்கள் விரும்பியபடி வாழ விரும்புகிறார்கள். ஆனால் சமூகம் இதற்கு சம்மதிக்கவில்லை. அந்த 2 பெண்களின் வாழ்க்கை போராட்டம் எப்படி செல்கிறது? தாங்கள் விரும்பிய வாழ்க்கையை பெற்றார்களா? என்பது தான் இந்த படத்தின் விறுவிறுப்பான கதை. பலரும் பாராட்டிய இந்த திரைப்படம் தற்போது நெட் ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கு சர்வதேச சினிமா ரேட்டிங் தளமான ஐ.எம்.டி.பி 8.4 புள்ளிகளை வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது . Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Bollywood , Latest News First Published : December 19, 2024, 3:19 pm IST படிக்கவும் தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / ஹீரோ, ஹீரோயின் கிடையாது… 2024-ல் பட்ஜெட்டை விட 5 மடங்கு லாபம் சம்பாதித்த படம் இதுதான்!! ஹீரோ, ஹீரோயின் கிடையாது… 2024-ல் பட்ஜெட்டை விட 5 மடங்கு லாபம் சம்பாதித்த படம் இதுதான்!! பலரும் பாராட்டிய இந்த திரைப்படம் தற்போது நெட் ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கு சர்வதேச சினிமா ரேட்டிங் தளமான ஐ.எம்.டி.பி 8.4 புள்ளிகளை வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது . படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 19, 2024, 3:22 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு படம் நன்றாக ஓடுவதற்கு மிகப்பெரிய ஹீரோ ஹீரோயின் தேவையில்லை என்பதை சில படங்கள் நிரூபித்துள்ளன. நல்ல கதை அம்சம் கொண்ட விறுவிறுப்பான படங்கள் பட்ஜெட்டை விடவும் பல மடங்கு லாபம் சம்பாதித்து கொடுக்கின்றன. அந்த வகையிலான ஒரு இந்தி படம் தான் லாபட்டா லேடிஸ். இதற்கு காணாமல் போன பெண்கள் என்று அர்த்தம் கொள்ளலாம். ஆமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இந்த படத்தை குறைந்த பட்ஜெட்டில் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ஆஸ்கார் போட்டிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த படத்தில் இடம்பெற்ற யாரும் ரசிகர்களால் அறியப்படாதவர்கள். போலீஸ் அதிகாரியாக ஷியாம் மனோகர் கேரக்டரில் ரவி கிஷன் நடித்திருந்தார். மற்ற கேரக்டர்கள் யாரும் அதிக அனுபவம் இல்லாதவர்கள். போலீஸ் கேரக்டரில் முதலில் அமீர் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று கூறி இயக்குனர் கிரண் நீக்கிவிட்டார். இந்தத் திரைப்படம் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. கடந்த மார்ச் 1-ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தியேட்டர் ரிலீஸில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் 25 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராமத்தில் நடக்கும் இந்த கதையில் 2 பெண்கள் தாங்கள் விரும்பியபடி வாழ விரும்புகிறார்கள். ஆனால் சமூகம் இதற்கு சம்மதிக்கவில்லை. அந்த 2 பெண்களின் வாழ்க்கை போராட்டம் எப்படி செல்கிறது? தாங்கள் விரும்பிய வாழ்க்கையை பெற்றார்களா? என்பது தான் இந்த படத்தின் விறுவிறுப்பான கதை. பலரும் பாராட்டிய இந்த திரைப்படம் தற்போது நெட் ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்துக்கு சர்வதேச சினிமா ரேட்டிங் தளமான ஐ.எம்.டி.பி 8.4 புள்ளிகளை வழங்கி இருப்பது கவனிக்கத்தக்கது . Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Bollywood , Latest News First Published : December 19, 2024, 3:19 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.