ENTERTAINMENT

"நந்தா திரைப்படம் எனது வாழ்க்கையை மாற்றியது" - இயக்குநர் பாலா குறித்து நெகிழ்ந்த சூர்யா!

இயக்குநர் பாலா இயக்கத்தில் தான் நடித்த நந்தாதான் தனது வாழ்க்கையையே மாற்றியது என நடிகர் சூர்யா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். பாலாவின் 25 ஆண்டு கால திரைப்பயணம் மற்றும் ‘வணங்கான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. பாலாவை வாழ்த்தும் விதமாக அவருக்கு நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் ஆகியோர் தங்கச் சங்கிலியை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, பாலா குறித்து நெகிழ்ச்சியுடனும் உருக்கத்துடனும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். பாலா உறவுகளுக்கு மதிப்பளிக்கக் கூடியவர் எனத் தெரிவித்த சூர்யா, அண்ணா என சொல்வது வெறும் வார்த்தை அல்ல, அது பெரிய உறவு என்றார். நந்தா படத்திற்காக தன்னை பாலாதான் முதன்முதலில் புகைபிடிக்க வைத்தார் எனத் தெரிவித்த சூர்யா, புகைப்பிடிக்கும் பழக்கம் தனக்கு இல்லாததால் அக்காட்சிக்காக 300 தீக்குச்சிகளை செலவழித்து கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், சேது படம் பார்த்த பிறகு அதிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு 100 நாட்கள் ஆகியது. அப்படி ஒரு படைப்பிற்குப் பிறகு பாலாவின் அடுத்த திரைப்படத்தில் நான் கதாநாயகனாக இருப்பேன் என்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. என்னை நானே புரிந்துகொள்வதற்கு முன்பாக என்னை வைத்து திரைப்படம் இயக்க முன்வந்தவர் பாலா என்றும் நெகிழ்வாகப் பேசினார். பாலாவின் போன் கால் என் வாழ்க்கையை மாற்றியது. அது வரவில்லை என்றால் நான் இந்த இடத்தில் கிடையாது. ஏனெனில் நந்தா படம் பார்த்துப் பின்புதான் காக்க காக்க படம் ஜி. கௌதம் வாசுதேவ் மேனன் வாய்ப்பு கொடுத்தார். காக்க காக்க பார்த்த பிறகுதான் ஏ.ஆர். முருகதாஸ் கஜினி திரைப்படம் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் என்றும் சூர்யா தெரிவித்தார். பின்னர் மேடையில் பேசிய இயக்குநர் பாலா, சூர்யாவோடு பணியாற்றும்போது ஒரு நடிகரோடு பணியாற்றுவது போல அல்லாமல் தன் தம்பியோடு பணியாற்றுவது போல் இருக்கும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சூர்யா வருத்தப்படுவார் என்ற காரணத்துக்காகவே சூர்யாவுக்கு முன்பாக தான் புகைப்பிடிப்பதில்லை எனத் தெரிவித்த பாலா, ஒரு தம்பியாக இருந்தால் மட்டுமே இப்படி வருத்தப்பட முடியும் எனவும் குறிப்பிட்டார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.