ENTERTAINMENT

Viduthalai 2 Review: "விடுதலை 2" - புரட்சினா என்னனு 2k கிட்ஸ்கும் புரியும்... வெற்றி மாறனின் தரமான சம்பவம்...

"விடுதலை 2" விடுதலை பாகம் இரண்டு வெற்றிமாறனின் சம்பவம் என ரசிகர்கள் கருத்து. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விடுதலை பாகம் இரண்டு படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று விஜயா திரையரங்கிலும் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படங்களில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை பாகம் ஒன்று. இப்படத்தில் சூரி கதையின் நாயகனாகவும், வாத்தியாராக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். மேலும் கௌதம் மேனன், இளவரசு, ராஜிவ் மேனன், சேட்டன், தமிழ் ஆகிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து விடுதலை பாகம் இரண்டு இன்று வெளியாகி உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக அது சமூகத்தில் உள்ள பிரச்சனையையும் பேசும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன்படி விடுதலை பாகம் இரண்டிலும் நிறைய சமூகப் பிரச்சனைகள் இடம்பெற்றுள்ளன. விடுதலை பாகம் இரண்டு படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தில் அழுத்தமான அரசியல் வசனங்களும், காட்சிகளும், கருத்துகளும் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் படம் பார்க்க வேற லெவலாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் விடுதலை 2 திரைப்படத்தின் திரைக்கதை பக்காவாக இருப்பதாகவும், இளையராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். இதையும் வாசிக்க: Government Jobs: “NHM திட்டத்தில் உள்ளூர் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு” - இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… மேலும் விஜய் சேதுபதியின் நடிப்பும், சூரி, விஜய் சேதுபதியின் இடையிலான காட்சிகள் படத்தை வேற லெவலுக்கு கொண்டு போய் இருக்கின்றது என கூறுகின்றனர். குறிப்பாக படத்தில் முதல் 25 நிமிட காட்சிகள் பயங்கரமாக இருப்பதாகவும், சேட்டன் கதாபாத்திரம் சூப்பர் என்றும், இந்த ஆண்டின் சிறந்த படம் என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.