ENTERTAINMENT

22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு பெற்றது!

இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் மற்றும் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 12 முதல் 19 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடந்தது. இதில் தமிழ் படங்கள் இந்தியாவின் பல்வேறு மொழி படங்கள் மற்றும் பன்னாட்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டது. போட்டியில் வெற்றிபெற்ற படங்களுக்கு கோப்பையுடன் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இதில் தமிழ் திரைப்பட பிரிவில் அமரன், போட், புஜ்ஜி அட் அனுப்பட்டி, செவப்பி, ஜமா, கொட்டுக்காளி, கோழிப்பண்ணை செல்லதுரை, லப்பர் பந்து, மகாராஜா, மெய்யழகன், நந்தன், ரசவாதி, தங்கலான், வாழை, வெப்பம் குளிர் மழை, வேட்டையன், அயலி, டிமாண்டி காலனி 2, கருடன், ஹாட்ஸ்பாட், லாக்டவுன், நீல நிற சூரியன், பார்க்கிங், டீன்ஸ், வல்லவன் வகுத்ததடா ஆகிய 25 படங்கள் திரையிடப்பட்டது. மேலும் இந்தியன் பனோரமா பிரிவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தமிழ் படம் திரையிடப்பட்டது. ஈரான், ஜெர்மனி, செக் குடியரசு, தென் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதன் நிறைவு விழா இன்று‌ சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் பட்டியல். 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது அமரன் படத்திற்காக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு வழங்கப்பட்டது. மேலும் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது அமரன் படத்திற்காக நடிகை சாய் பல்லவி அவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் விருது மகாராஜா படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக்கொண்டார். இருவருக்கும் தலா ரூ.50ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளர் விருது அமரன் படத்திற்காக ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நம்பிக்கை நடிகருக்கான விருது நடிகர் அர்ஜுன் தாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட படங்களில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது வாழை திரைப்படத்தில் நடித்த பொன் வேலுக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான விருது வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்த துஷாரா விஜயனுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது தமிழ் சிறந்த திரைப்படம் விருது ரப்பர் பந்து படத்திற்காக தமிழரசன் பச்சமுத்துவிற்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருது லப்பர் பந்து படத்திற்காக தினேஷ் பெற்றுக்கொண்டார். சிறந்த கலை இயக்குனருக்கான விருது தங்கலான் படத்திற்காக கலை இயக்குனர் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. சிறந்த படத்தொகுப்பு விருது மகாராஜா படத்திற்காக பிலோமின் ராஜ் பெற்றுக்கொண்டார். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான விருது வேட்டையன் படத்திற்கு வழங்கப்பட்டது. இதனை தமிழ் குமரன் பெற்றுக்கொண்டார். பிடித்தமான(ஃபேவரிட் ஹீரோயின்) நடிகை விருதுக்கு கொட்டுக்காளி படத்தில் நடித்த அன்னா பென் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது அவருக்கு பதிலாக படத்தின் இயக்குனர் வினோத் விருதினை பெற்றுக்கொண்டார். சிறந்த எழுத்தாளர் ஜூரி விருது கோழிப் பண்ணை செல்லத்துரை படத்திற்காக சீனு ராமசாமிக்கு வழங்கப்பட்டது. ஸ்பெஷல் ஜூரி விருது வாழை படத்திற்காக மாரி செல்வராஜிற்கு வழங்கப்பட்டது. தங்கலான் படத்தை இயக்கிய பா. ரஞ்சித்துக்கு சிறந்த இயக்குனருக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிர்வாக விருது வழங்கப்பட்டது. சமூகம் சார்ந்த சிறந்த படத்திற்கான விருது நந்தன் படத்திற்காக இயக்குனர் இரா. சரவணனுக்கு வழங்கப்பட்டது. இதையும் படிங்க: விடுதலை 2 படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை… சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஸ்பெஷல் ஜூரி சிறந்த திரைப்படத்திற்கான விருது ஜமா படத்திற்கு வழங்கப்பட்டது. இதனை ஜமா படத்தின் இயக்குனர் பாரி இளவழகன் பெற்றுக்கொண்டார். ஸ்பெஷல் ஜூரி விருது போட் படத்திற்காக யோகிபாபுவிற்கு அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக இயக்குனர் சிம்புதேவன் அதனை பெற்றுக் கொண்டார். மெய்யழகன் படத்திற்காக பிடித்தமான நடிகர் பிரிவில் நடிகர் அரவிந்த்சாமி விருதினை பெற்றுக் கொண்டார். 22 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், முன்பெல்லாம் நாயகர்கள் பெயரைச் சொல்லி படம் தொடர்பாக பேசுவார்கள் ஆனால் தற்பொழுது வெற்றி மாறன் படம், பாலா படம், பா.ரஞ்சித் படம், மாரி செல்வராஜ் படம் என இயக்குனர்கள் உயர்ந்த நடிகர்களுக்கு சமமாக தங்களை நிரூபித்துக் காட்டியுள்ளனர். சமீபத்தில் கங்குவா படத்திற்கு எழுந்த விமர்சனம் என்னை பாதித்தது. தவறான எண்ணத்திற்கு யாரும் கஷ்டப்பட மாட்டார்கள். படம் வெளியான முதல் நாள், இரண்டாவது நாளிலேயே படத்தைப் பற்றி தவறாக பேசி படத்திற்கு யாரையும் வரவிடாத அளவிற்கு செய்து விட்டுனர். படத்தை பார்த்து படம் நன்றாக உள்ளதா என்பதை ரசிகர்கள் முடிவு செய்ய வேண்டும். மீடியா கையில் கிடைத்த உடனே தவறான ஆட்கள் அதனை பயன்படுத்திக் கொண்டு படத்தை மோசமாக விமர்சித்துள்ளனர். சிறந்த நடிகர் விருது பெற்ற நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், இதையும் படிங்க: Viduthalai 2 First Review | விடுதலை 2 படத்தின் முதல் விமர்சனம் இதோ.. முதல் பாகத்தை மிஞ்சுமா? சென்னை சர்வதேச திரைப்பட விழா கற்பிப்பதற்கான இடம். சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டாவது விருது பெறுகிறேன். இந்த விருது முழுக்க முழுக்க நித்திலனின் சிந்தனைக்காகவும், அவனின் உழைப்பிற்காகவும் கிடைத்த விருது. நாளை விடுதலை இரண்டாவது பாகம் வெளியாகிறது அதனை பார்த்து ரசியுங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். குமுதா ஹாப்பி அண்ணாச்சி என ரசிகர்கள் ஒலி எழுப்ப, குமதா ஆல்ரெடி ஹேப்பி வாத்தியார் நாளை திரைக்கு வருகிறார் என்றார். சிறந்த நடிகை விருது பெற்ற சாய் பல்லவி பேசுகையில், அமரன் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இந்த அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு இயக்குனர் ராஜ்குமார் தான் காரணம். இந்த படம் வெளியானதற்கு பிறகு கடந்த சில நாட்களாக அதிக அளவிலான அன்பை பெற்று வருகிறேன். ரசிகர்களுக்கு நன்றி என்றார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.