NATIONAL

Tamil Live Breaking News: ராகுல்காந்தி மீது பாஜக பெண் எம்.பி. குற்றச்சாட்டு

Tamil Nadu Rain Update | செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழ்நாடு உடன் இணைந்திருங்கள். அம்பேத்கர் குறித்த சர்ச்சைப்பேச்சு காரணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும். அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளது. நெல்லை புதுக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகவரி கேட்டபோது, தெரியவில்லை எனக்கூறியதால் மைதீன் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தமிழ் செய்திகள் / இந்தியா / Tamil Live Breaking News: ராகுல்காந்தி மீது பாஜக பெண் எம்.பி. குற்றச்சாட்டு AUTO REFRESH OFF ON Tamil Live Breaking News: ராகுல்காந்தி மீது பாஜக பெண் எம்.பி. குற்றச்சாட்டு Tamil Live Breaking News : உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். 1-MIN READ Published By: Raj Kumar Tamil Last Updated : December 19, 2024, 10:02 pm IST Tamil Nadu Tamil Nadu Rain Update | செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழ்நாடு உடன் இணைந்திருங்கள். படிக்கவும்… புதிய நிலை 0 new update December 19, 2024, 9:27 am IST Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு நேரலை December 19, 2024, 10:02 pm IST Tamil Live Breaking News: ராகுல் காந்தி மீது போலீஸ் வழக்கு பதிவு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்களுடன் மோதலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் அளித்த புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. December 19, 2024, 7:57 pm IST Tamil Live Breaking News: அவதூறு கருத்து... பாஜக நிர்வாகி கைது கர்நாடக பெண் அமைச்சர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக நிர்வாகி சி.டி.ரவி கைது செய்யப்பட்டுள்ளார். விளம்பரம் December 19, 2024, 4:50 pm IST Tamil Live Breaking News: திருநெல்வேலியில் கேரள கழிவுகளை கொட்டிய 2 பேர் கைது திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் வாங்கிக்கொண்டு கழிவுகளை கொட்டியதாக சுத்தமல்லியை சேர்ந்த மனோகர், மாயாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கழிவு கொட்டடப்பட்ட விவகாரத்தில் மனோகர் தலைமை ஏஜென்டாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார். December 19, 2024, 3:48 pm IST Tamil Live Breaking News: மூத்த அமைச்சர்களுடன் அமித்ஷா அவசர ஆலோசனை பாஜக மூத்த அமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். பாஜக தேசிய தலைவர் நட்டா, அமைச்சர்கள் பியூஷ் கோயல், சிவராஜ் சிங் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு குறித்தும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே நடந்த தள்ளு முள்ளு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. December 19, 2024, 3:22 pm IST Tamil Live Breaking News: ராகுல்காந்தி மீது பாஜக பெண் எம்.பி. குற்றச்சாட்டு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது அருகே வந்து தாக்க முற்பட்டதாக நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த பாஜக பெண் எம்.பி.பான்ங்னான் கோன்யான் குற்றச்சாட்டியுள்ளார். பழங்குடியின பெண்ணான தனக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்ககோரியும், ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். விளம்பரம் December 19, 2024, 3:13 pm IST Tamil Live Breaking News: வங்கியில் புகுந்து ஊழியரை தாக்கியவர் கைது சென்னை தியாகராய நகரில் தனியார் வங்கியில் புகுந்து ஊழியரை கத்தியால் தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நந்தனத்தில் ஒன்றாக பணிபுரிந்த தினேஷ், சதீஸ் ஆகியோர் 2 ஆண்டுகளுக்கு முன் வேலையை இழந்த சதீஸ், அதற்கு தினேஷ்தான் காரணம் என கூறி முன்விரோதத்தில் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் தரப்பில் விளக்கமளித்துள்ளது. December 19, 2024, 12:36 pm IST Tamil Live Breaking News: ராகுல் காந்தி, தன்னை கீழே தள்ளி விட்டதாக பாஜக எம்.பி குற்றச்சாட்டு அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை கண்டித்து பாஜகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தன்னை கீழே தள்ளி விட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி குற்றச்சாட்டு வைத்துள்ளார். December 19, 2024, 12:37 pm IST Tamil Live Breaking News: மக்களவை ஒத்திவைப்பு மக்களவை தொடங்கியதும் எதிர்கட்சியினர் அமளி செய்ததால், பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. விளம்பரம் December 19, 2024, 11:38 am IST Tamil Live Breaking News: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், பாஜக போராட்டம் அம்பேத்கர் குறித்து அமித் ஷா சர்ச்சையாக பேசியதாக கூறி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் போராடி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பாஜக போராடி வருகிறார்கள். இந்த நிலையில், இரு கட்சி எம்.பிகளுக்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது. December 19, 2024, 11:34 am IST Tamil Live Breaking News: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு - தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்யக் கோரிய மனுக்களை ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் December 19, 2024, 11:20 am IST Tamil Live Breaking News: அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விளம்பரம் December 19, 2024, 11:19 am IST Tamil Live Breaking News: தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைவு இன்று (19.12.2024) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.65 குறைந்து ரூ.7,070க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.520 குறைந்து ரூ.56,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. December 19, 2024, 11:18 am IST Tamil Live Breaking News: அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங். நோட்டீஸ் அம்பேத்கர் குறித்த சர்ச்சைப்பேச்சு காரணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும். அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளது. December 19, 2024, 11:09 am IST Tamil Live Breaking News: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த முடிவை மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கட்சி சின்னம் தொடர்பாக அனைத்து தரப்பினர் கருத்தைக் கேட்டு முடிவு எடுக்கும்படி ஏற்கனவே தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நேரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. விளம்பரம் December 19, 2024, 9:30 am IST Tamil Live Breaking News: புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ள ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வரும் எனவும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. December 19, 2024, 9:29 am IST Tamil Live Breaking News: குற்றாலம் மெயின் அருவியில் அனுமதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். December 19, 2024, 9:28 am IST Tamil Live Breaking News: அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விளம்பரம் December 19, 2024, 9:27 am IST Tamil Live Breaking News: பெட்ரோல் குண்டு: 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது நெல்லை புதுக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகவரி கேட்டபோது, தெரியவில்லை எனக்கூறியதால் மைதீன் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு December 19, 2024, 9:26 am IST Tamil Live Breaking News: காங்கிரஸ் எம்.பி.களுக்கு எக்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது தொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி.களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ். மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்திடம் இருந்து எக்ஸ் நிறுனவத்திற்கு நோட்டீஸ் வந்ததை அடுத்து எம்.பி.களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல். December 19, 2024, 9:22 am IST Tamil Live Breaking News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள். விளம்பரம் First Published : December 19, 2024, 9:20 am IST None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.