நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் பேரணி செல்ல திட்டமிட்டனர். ஆனால், அதற்கு முன்னதாகவே, அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாகக் கூறி, நாடாளுமன்ற நுழைவு வாயில் முன் பாஜக எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் இந்தியா கூட்டணியினர், நீல நிற ஆடையில் அம்பேத்கரின் படத்தை ஏந்தியபடி, அம்பேத்கர் சிலையில் இருந்து நாடாளுமன்ற நுழைவு வாயில் வரை பேரணி சென்றனர். அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் நான்காவது நுழைவாயிலான மகர துவார் அருகே இரண்டு தரப்பினரும் சந்தித்துக் கொண்ட போது, பரஸ்பரம் கண்டன முழக்கங்கள் வலுவாக எதிரொலித்தன. ஒரு கட்டத்தில் முழக்கங்கள் வாதங்களாக மாறி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் ராகுல் காந்தி ஒரு எம்.பி.யை தள்ளி விட்டதாகவும், அவர் வந்து தன் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகவும் பிரதாப் சந்திர சாரங்கி குற்றம்சாட்டினார். மேலும் அவைக்குச் சென்ற தன்னைத் தடுத்து மிரட்டியதாக பாஜகவினர் மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய பாஜக எம்.பி.-க்கள் அனுமதி மறுத்ததாகக் கூறி, வளாக சுவர் மீது ஏறி இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தப் போராட்டத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியால், தனது கண்ணியம் மற்றும் சுயமரியாதை மிகவும் புண்படுத்தப்பட்டுள்ளதாக பெண் எம்.பி. ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நாகாலாந்து மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பா.ஜ.க. எம்.பி., பான்ங்னான் கோன்யான். இவர் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது புகார் கூறி மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “மகர துவார் பகுதியில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மற்ற எம்.பி.க்களுடன் திடீரென அங்கு வந்தார். பிறகு குரலை உயர்த்தி என்னை தாக்க முற்பட்டார். இதையும் படியுங்கள் : “அயோத்தியில் அம்பேத்கர் தான் வென்றார்..” - அமித்ஷா பேச்சுக்கு சீமான் பதில் ஒரு பெண் எம்.பி.யான எனக்கு மிக அருகில் வந்தார். அது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. Rajya Sabha MP S Phangnon Konyak writes to the Chairman Rajya Sabha alleging misbehaviour by Congress MP and LoP Rahul Gandhi with her. "My dignity and self-esteem has been deeply hurt by LoP Rahul Gandhi," she writes in the letter to Chairman Rajya Sabha. pic.twitter.com/zPOI5FeR6d பழங்குடி சமூதாயத்தைச் சேர்ந்த என்னிடம் ராகுல் காந்தி, தவறாக நடந்துகொண்டது. எனது, கண்ணியம் மற்றும் சுயமரியாதை ஆழமாக காயப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். None
Popular Tags:
Share This Post:

Tamil Live Breaking News: இரங்கல் தீர்மானத்திற்கு பின் சட்டப்பேரவை ஒத்திவைப்பு
January 7, 2025
ஃபீஸ் செலுத்தாத மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. இப்படியும் ஒரு பள்ளியா? பெற்றோர் விளாசல்
December 22, 2024What’s New
Spotlight
பணம், பவருக்காக 12 பேர் கொலை... குஜராத்தை உலுக்கிய சம்பவம்...
- by Sarkai Info
- December 20, 2024
ஹரியானா முன்னாள் முதல்வர் சௌதாலா காலமானார்; நயாப் சிங் சைனி இரங்கல்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
Featured News
மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து; அரபிக்கடலில் மூழ்கிய சுற்றுலாப் படகு
- By Sarkai Info
- December 18, 2024
Latest From This Week
மாணவியை 15 முறை கடித்த எலி... தடுப்பூசி போட்டதால் வந்த புதிய சிக்கல் - அதிர்ச்சி சம்பவம்!
NATIONAL
- by Sarkai Info
- December 18, 2024
“நான் ராஜினாமா செய்ய தயார்..!” - அம்பேத்கர் சர்ச்சை விவகாரத்தில் அமித்ஷா அதிரடி
NATIONAL
- by Sarkai Info
- December 18, 2024
பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுத்தால் உங்கள் மீது வழக்கு பாயும்… இந்தியாவில்தான் இந்த அதிரடி நடவடிக்கை…
NATIONAL
- by Sarkai Info
- December 17, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.