NATIONAL

Tamil Live Breaking News: பிக்பாஸில் சர்ச்சை கருத்து.. நடிகர் விஜய் சேதுபதி மீது போலீசில் புகார்

Tamil Nadu Rain Update | செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். “ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்; இந்திய அரசியலை மொத்தமாக மாற்றும் அச்சுறுத்தலுடன் வரும் மசோதா” என ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு. முக்கிய மசோதாவை நிறைவேற்ற பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும் முக்கிய பிரச்சனைகளை தீர்க்காத பாஜக, ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்த முயற்சி. மாநிலத் தேர்தல்கள் தங்களது அரசியல் முக்கியத்துவத்தை இழக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து. நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தித் தர கோரிக்கை வைத்து விவசாயிகள் எர்ணாகுளம் – காரைக்கால் செல்லும் ரயிலை மறித்து போராட்டம். எம்.எஸ்.சாமிநாதன் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம். “ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை மட்டுமின்றி, அர்த்த மண்டபத்திற்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை” கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜாவை வெளியேற்றிய ஜீயர்கள்; உற்சவர் வீற்றிருக்கும் அர்த்த மண்டபமும் கருவறையாக பாவிப்பதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை – ஆண்டாள் கோயிலில் இளையராஜாவை தடுத்து நிறுத்தியது சர்ச்சையான நிலையில் கோயில் நிர்வாகம் விளக்கம் விரிவாக படிக்க: அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா – விளக்கம் அளித்த ஆண்டாள் கோயில் நிர்வாகம்! வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம். நேற்றே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்ட நிலையில் இதுவரை உருவாகவில்லை. காலை 5.30 மணி நிலவரப்படி அடுத்த 24 மணி நேரத்தில்தான் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிப்பு. தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, வேறு பாதிப்புகள் இருந்தாலோ விடுமுறை விட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல். தாமிரபரணி கரையோர கிராமங்களில் உள்ள பள்ளிகளை உள்ளாட்சி அலுவலர்கள் ஆய்வுசெய்து, பாதுகாப்பை உறுதி செய்தபின் மாணவர்களை அனுமதிக்க வேண்டும்; முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து தலைமை ஆசிரியர்களே பள்ளிகளுக்கு விடுமுறை விடலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.