TAMIL-NADU

ஆளுநர் சிறிதும் கவலைப்படாமல் இருப்பது மாணவர் நலனுக்கு எதிரானது.. அமைச்சர் கோவி.செழியன்!

பல மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் செயல்படுவது குறித்து ஆளுநர் சிறிதும் கவலைப்படாமல் இருப்பது மாணவர் நலனுக்கு எதிரானது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவற்றுக்கு, தலா 3 பேர் அடங்கிய துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்தது சட்டப்படி சரி எனவும், ஆளுநர் கூறுவது படி, 4-ஆவது நபராக யுஜிசி தலைவரால் பரிந்துரைக்கபடும் நபரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். யுஜிசியின் நெறிமுறைகள் வழிகாட்டுதல்களே தவிர அவற்றை ஏற்பதும் ஏற்காததும் அரசின் முடிவுக்கு உட்பட்டது எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் ஆளுநர் இடையூறு செய்வதன் ஒரு பகுதி தான் துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரம் எனவும் விமர்சித்துள்ளார். வேந்தர் என்ற நியமன பதவியை பயன்படுத்தி அரசின் நடவடிக்கைகளை முடக்குவது ஏற்புடையது அல்ல எனவும், தேடுதல் குழுவுக்கு ஒப்புதல் அளிப்பதே மாணவர் நலனுக்கு உகந்தது எனவும் அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / ஆளுநர் சிறிதும் கவலைப்படாமல் இருப்பது மாணவர் நலனுக்கு எதிரானது.. அமைச்சர் கோவி.செழியன்! ஆளுநர் சிறிதும் கவலைப்படாமல் இருப்பது மாணவர் நலனுக்கு எதிரானது.. அமைச்சர் கோவி.செழியன்! பல மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் செயல்படுவது குறித்து ஆளுநர் சிறிதும் கவலைப்படாமல் இருப்பது மாணவர் நலனுக்கு எதிரானது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 20, 2024, 8:05 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Aishwarya.s Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் பல மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் செயல்படுவது குறித்து ஆளுநர் சிறிதும் கவலைப்படாமல் இருப்பது மாணவர் நலனுக்கு எதிரானது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவற்றுக்கு, தலா 3 பேர் அடங்கிய துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்தது சட்டப்படி சரி எனவும், ஆளுநர் கூறுவது படி, 4-ஆவது நபராக யுஜிசி தலைவரால் பரிந்துரைக்கபடும் நபரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். விளம்பரம் யுஜிசியின் நெறிமுறைகள் வழிகாட்டுதல்களே தவிர அவற்றை ஏற்பதும் ஏற்காததும் அரசின் முடிவுக்கு உட்பட்டது எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் ஆளுநர் இடையூறு செய்வதன் ஒரு பகுதி தான் துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரம் எனவும் விமர்சித்துள்ளார். தினமும் காலையில் 2 உலர் ஆப்ரிகாட் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.! மேலும் செய்திகள்… வேந்தர் என்ற நியமன பதவியை பயன்படுத்தி அரசின் நடவடிக்கைகளை முடக்குவது ஏற்புடையது அல்ல எனவும், தேடுதல் குழுவுக்கு ஒப்புதல் அளிப்பதே மாணவர் நலனுக்கு உகந்தது எனவும் அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தியுள்ளார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: governor , Latest News , RN Ravi , Tamilnadu First Published : December 20, 2024, 8:05 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.