TAMIL

Rajinikanth: ரஜினிக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அப்போலோவில் அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? முழு விவரம் இதோ

Rajinikanth Health Condition: இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகராக பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த செய்தி பரவியது முதல் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு என்ன ஆனது என்ற கவலை அதிகரிக்கத் தொடங்கியது. சூப்பர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காரணம் என்ன? அவருக்கு என்ன சிகிச்சை நடந்தது? ரஜினிகாந்தின் உடல்நிலை பற்றியும் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினை பற்றியும் இந்த பதிவில் காணலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ள முக்கிய இரத்த நாளங்களில் வீக்கம் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீக்கம் அறுவை சிகிச்சை அல்லாத செயல்முறை மூலம் மருத்துவ நிபுணர்களால் சரி செய்யப்பட்டது. இந்த செயல்முறை டிரான்ஸ்கெதெடிர் (Transcatheter) முறையில் செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செயல்முறை மூலம் எயோடாவில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. இதன் பிறகு இரத்த நாளங்களில் இருந்த வீக்கம் முற்றிலுமாக சரி செய்யப்பட்டுள்ளது. இந்த நுணுக்கமான மற்றும் நவீனமான மருத்துவ செயல்முறையை மூத்த கார்டியாலஜிஸ்ட் டாக்டர் சாய் சதீஷ் செய்துள்ளார். அவர் வீக்கத்தை குறைக்க எண்டோவாஸ்குலர் ரிபேர் என்ற நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. திட்டமிட்டபடி இந்த செயல்முறை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும் ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Aorta Aneurysm: இதில் என்ன பிரச்சனை ஏற்படுகின்றது? சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைக்கு அயோர்டிக் அனீரிசம் (Aortic aneurysm) என்று பெயர். இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் பிரதான இரத்த நாளத்தின் (பெருநாடி) சுவர் பலவீனமடைந்து வீக்கமடையும் போது இந்த பிரச்சனை ஏற்படுகொன்றது. இதை சரியான நேரத்தில் சரிசெய்யப்படாவிட்டால், அது வெடித்து, உயிருக்கு ஆபத்தாகும் அபாயமும் ஏற்படலாம். மேலும் படிக்க | Rajinikanth: ரஜினி உடல்நிலை எப்படி உள்ளது? அப்பல்லோ மருத்துவமனை பரபர அறிக்கை Aorta Aneurysm: இதற்கான சிகிச்சை என்ன? இன்றைய நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் உபயத்தால், இந்த சிக்கலை இப்போது அறுவை சிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும். ரஜினிகாந்தின் இந்த பிரச்சனைக்கு டிரான்ஸ்கேதீட்டர் நுட்பம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முறையில், வடிகுழாயின் உதவியுடன் வீங்கிய இடத்தில் ஸ்டென்ட் செலுத்தப்படுகிறது. இதன் காரணமாக வீக்கம் நிறுத்தப்பட்டு இரத்த நாளங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? ரஜினிகாந்துக்கு செய்யப்பட்ட்ட மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தூள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணித்தும் வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது திருப்திகரமாக இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைந்து அடுத்த இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளது சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு நிம்மதியான செய்தியாக வந்துள்ளது. மேலும் படிக்க | Rajinikanth: ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார் - வெளியான சமீபத்திய தகவல்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.