TAMIL

'நிர்வாண திருமணம்' 29 தம்பதிகளும் உடம்பில் ஒட்டுத் துணிக்கூட இல்லாமல்... உறைய வைக்கும் வினோத நிகழ்வு

World Bizarre News: திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமான பகுதியாகும். அதாவது திருமண வாழ்க்கை வேறு. திருமணம் நடைபெறும் அந்த தினம் என்பது வாழ்வில் மறக்க இயலாத நாளாக இருக்கும். கடந்த காலங்களில் தனிமையில் சுற்றி வந்ததற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நாள். அதேபோல், இணையருடன் புதிய வாழ்வு தொடங்குவதும் அந்த நாளில்தான். இதனால்தான், அனைத்து மதங்களிலும் திருமணத்திற்கு என பல்வேறு சடங்கு, சம்பிரதாயங்களை வைத்திருக்கின்றன. திருமணம் என்றாலே விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை அணிந்து பகட்டாக வலம் வருவதுதான் என்ற புரிதல் இங்கு பலருக்கும் உள்ளது. அந்த ஒருநாள் கொண்டாட்டத்திற்கு பல லட்சம் ரூபாயை கடன் வாங்கி செலவழித்து, பல ஆண்டுகளாக அந்த கடனுக்கு வட்டி மட்டும் கட்டும் நபர்களை நீங்களும் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். எளிமையாக, எவ்வித தேவையற்ற செலவும் இன்றி திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தையும் பார்க்க முடிகிறது. அநாவசிய செலவுகள் உங்களின் எதிர்கால சேமிப்புகளை பதம்பார்க்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது பொருளாதார அறிஞர்களின் அறிவுரையாக உள்ளது. 29 தம்பதிகளின் நிர்வாண தம்பதிகள் இந்த நிலையில், ஆடையோ, ஆபரணங்களோ இன்றி அதாவது ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் 29 தம்பதிகளும் நிர்வாணமாக திருமணம் செய்துள்ள நிகழ்வு பலரையும் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் உறைய வைத்திருக்கிறது. அதாவது, ஒருமணி நேரம் வரை நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், ஒவ்வொரு தம்பதிகளும் தங்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றனர். சொகுசு ரிசார்டில் இந்த திருமண விழா மூன்று நாள்கள் கொண்டாட்டத்துடன் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க | 35 பேரை கார் ஏற்றிக் கொன்ற 'கொடூர' முதியவர்... துரத்தி துரத்தி கொலை - சீனாவில் அதிர்ச்சி முதன்முதலாக இதுபோன்று நிர்வாண திருமணம் என்பது 2003ஆம் ஆண்டு காதலர் தினம் அன்று நடந்திருக்கிறது. அப்போதிருந்து ஜமைக்காவின் Hedonism III ரிசார்டில் இந்த வினோதமான நிர்வாண திருமணத்தை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிகழ்வில் திருமண தம்பதிகள் மட்டுமின்றி திருமணத்திற்கு வருகை தரும் விருந்தினர்கள் கூட நிர்வாண நிலையில்தான் பங்கெடுப்பார்களாம். திருமணத்தை நடத்திய பாதிரியார் கடற்கரையோரம் உள்ள ரிசார்டின் முன்பக்க புல்வெளி பகுதியில்தான் இந்த நிர்வாண திருமணம் நடக்குமாம். மிகுந்த திறந்த மற்றும் சுதந்திரமான முறையில் திருமணம் செய்துகொள்ள இந்த முறையை பின்பற்றுகின்றனர். யூனிவர்சல் லைஃப் சர்ச் புளோரிடாவின் பாதிரியார் ஃபிராங்க் சர்வாசியோவின் தலைமையில் நிர்வாண திருமணம் நடைபெற்றது. மேலும் இந்த 29 தம்பதிகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பின்னணியை சேர்ந்தவர்கள் ஆவார். ரஷ்யா, செவ்விந்தியர்கள், கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒரு சில பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நிர்வாண திருமணத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்த நிர்வாண திருமணம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் போது சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதேபோலவே தற்போது இந்தாண்டு நிர்வாண திருமணத்தை அடுத்து அதன் புகைப்படங்கள் இணையத்தை கதிகலங்கச் செய்துள்ளனர். மேலும் படிக்க | பூமி போன்றே புதிய கிரகம் என்னென்ன இருக்கு தெரியுமா? ஷாக்கான விஞ்ஞானிகள்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.