TAMIL

10 வருடங்களாக விராட் காேலி சாப்பிடாத உணவு! இதுதான் அவரது டயட் சீக்ரெட்..

Virat Kohli Diet Secret : கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது உடலை கட்டுக்காேப்பாக வைத்திருப்பதற்கு பெயர் பெற்றவர். இவர் ஃபாலோ செய்யும் டயட் என்ன தெரியுமா? இந்திய அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரராக வலம் வருபவர், விராட் கோலி . பல சாதனைகளை படைத்திருக்கும் இவர், தன் உடலை ஃபிட்--ஆக வைத்திருக்கும் விளையாட்டு வீரராகவும் இருக்கிறார். இவரது டயட் சீக்ரெட் என்ன தெரியுமா? விராட் கோலி: விராட் கோலிக்கு தற்போது 36 வயது ஆகிறது. இந்த வயதிலும், இவர் விளையாடும் போது துடிப்புடனும், உயிர்ப்புடனும் இருக்கிறார். இரு குழந்தைகளுக்கு தந்தையாகவும், ஆக்டிவான விளையாட்டு வீரராகவும் இருக்கும் விராட் இதற்கு இடையே தான் சாப்பிடும் உணவுகளையும் சரியாக சாப்பிட்டு தன் உடலை பார்த்துக்கொள்கிறார். இவரது டயட் ரகசியம் குறித்து, அனுஷ்கா ஷர்மா ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். டயட் ரகசியம்: உடல் தகுதி என்பது, சாதாரண மக்களை விட திரை பிரபலங்கள், மாடலிங் செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், ஓட்டப்பந்தைய வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு மிகவும் தேவையானதாக பார்க்கப்படுகிறது. விராட்டின் டயட் குறித்த கேள்விக்கு அவரது மனைவி நேர்மையாக பதிலளித்திருக்கிறார். அதில், உடல் தகுதி மற்றும் உணவு கட்டுப்பாடு என்று வந்துவிட்டால் அதில் விராட் முழு ஒழுக்கத்துடன் இருப்பதாக கூறியிருக்கிறார். இதயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள, உடல் எடையை சரியாக பராமறிக்க உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, கார்டியோ உடற்பயிற்சி. இதனை தினமும் விராட் கோலி தவறாமல் செய்வதாக அனுஷ்கா ஷர்மா கூறியிருக்கிறார். மேலும், இந்த உடற்பயிற்சியை செய்யாத நாட்களில், வலு தூக்கி உடற்பயிற்சி செய்யும் விராட், எப்போதும் உடற்பயிற்சி செய்ய தவறுவதில்லை என்று கூறியிருக்கிறார். இதனுடன் இன்னும் சில விஷயங்களையும் விராட்டின் மனைவி பேசியிருக்கிறார். தன்னுடன், விராட் சில நேரங்களில் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். நோ தின்பண்டங்கள்: விராட் கோலி போல யாராலும் உணவு விஷயத்தில் கட்டுக்கோப்பாக இருக்க முடியாது என்று கூறும் விராட் கோலியின் மனைவி, அவர் கடந்த 10 ஆண்டுகளில் பட்டர் சிக்கனை சாப்பிட்டதே இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க சினேகா செய்யும் விஷயம்! அட, அசத்தலா இருக்கே.. தூக்கம் முக்கியம்! உடல் எடையை குறைக்க நினைப்பவர்களாக இருந்தாலும், சரியாக அதனை சமாளிக்க நினைப்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. உடலுக்கு ஏற்ற, 7-8 மணி நேரம் அவர்கள் சரியாக தூங்கவில்லை என்றால், அவர்களால் கண்டிப்பாக உடலை சரியாக கவனித்துக்கொள்ள முடியாது. இதை முழு மனதுடன் நம்பும் விராட் கோலி, தன் தூக்கத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாராம். அதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் அவர் சரியான நேரத்திற்கு உறங்க சென்று, சரியான நேரத்தில் எழுந்து கொள்வாராம். உணவுகளை பிரித்து சாப்பிடுவது.. விராட் கோலி, தனது ஒரு நாளைக்கான உணவை, கொஞ்சம் கொஞ்சமாக portion size-ல் சாப்பிடுவாராம். இதனால், குறைவாக-தனது உடலுக்கு ஏற்றவாறு சாப்பிட்டாலும், அந்த நாள் முழுவதும் அவருக்கு எனர்ஜி இருக்குமாம். எப்போது வெளியில் சாப்பிட்டாலும் கூட, அதிகமாக சாப்பிடாமல் தனக்கான டயட்டை மட்டும் அவர் ஸ்ட்ரிக்ட்-ஆக ஃபாலோ செய்வாராம். இவரது இந்த ஒழுக்கம், தன்னையும் ஈர்த்து, தன்னையும் ஒழுக்கமாக இருக்க வைப்பதாக அனுஷ்கா கூறியிருக்கிறார். மேலும் படிக்க | Jyothika : உடல் எடையை குறைக்க ஜோதிகா ‘இதை’ தினமும் குடிப்பாராம்! எளிதான இயற்கை பானம்.. சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.