TREND

உலகின் மிக ஏழ்மையான குடும்பம் இதுதானா? - ஆண்டுக்கு வெறும் ரூ.2 வருமானம்? வைரலான வருமான சான்றிதழ்.. அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

உலகின் மிக ஏழ்மையான குடும்பம் மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் நகரில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. புந்தேல்கண்டில் உள்ள சாகர் நகரில் ஒரு குடும்பத்தின் வருமானம் ஆண்டுக்கு ரூ.2 மட்டுமே என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. தாசில்தார் கையெழுத்துடன் வழங்கப்பட்ட இந்த வருமானச் சான்றிதழ்(income certificate) தற்போது இணையத்தில் வெளியாகி மக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வருமானச் சான்றிதழ் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வருமானச் சான்றிதழ், பண்டா தெஹ்சிலில் உள்ள கோக்ரா கிராமத்தைச் சேர்ந்த பல்ராம் சாதருக்கு சொந்தமானது. இந்த வருமானச் சான்றிதழ் ஜனவரி 2024ல் செய்யப்பட்டது. ஆனால், திடீரென தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Also Read: ISRAEL VS IRAN WAR | இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்… 184 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம்… திஜ்ஜு சாதரின் குடும்பம் கோக்ரா கிராமத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது . இந்த குடும்பத்தில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உட்பட ஐந்து பேர் உள்ளனர். மோசமான பொருளாதார நிலை காரணமாக ஒட்டுமொத்த குடும்பமும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் இளைய மகன் பல்ராம், 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்காலர்ஷிப் பெற, இந்த வருமானச் சான்றிதழை கொடுத்தபோது உதவித்தொகை வராததால், அதுகுறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஆசிரியர்கள் பார்த்தபோது, ​​சான்றிதழில் குறிப்பிட்டுள்ள வருமானம் தவறானது என தெரிய வந்தது. வருமான சான்றிதழை CSC மையத்தில் இருந்து பெற்றதாகவும், குடும்ப வருமானம் ரூ.40,000 என தெரிவித்திருந்தும் அதில் ரூ.2 என குறிப்பிடப்பட்டு உள்ளதாக பல்ராம் தெரிவித்து உள்ளார். இதை ஊழியர்களோ, சான்றிதழில் கையெழுத்திட்டு வழங்கிய தாசில்தாரோ கவனிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இதையடுத்து அந்த சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, வருமான சான்றிதழ் வழங்கிய தாசில்தார் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ​​ரூ.2 மதிப்புள்ள வருமானச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு ரூ.40,000 வருமான சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.