TREND

shock video: ஆழ் கடலில் நீந்திய பெண் டைவர்.. அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி சம்பவம்... வைரலாகும் வீடியோ!

கடலுக்கு அடியில் இருக்கும் உலகம் அழகானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் கவனமாக இருக்க வேண்டும். கடல்வாழ் உயிரினங்களை நாம் மதிக்க வேண்டும் அவற்றை கவனமாக நடத்த வேண்டும். இந்நிலையில், ஒரு அதிர்ச்சி வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் மாலத்தீவில் நடந்துள்ளது. மாலத்தீவின் இடிலிக் நீரில் டைகர் ஷார்க் என்ற வகையை சேர்ந்த சுறா ஒன்று கடலுக்குள் இறங்கிய டைவர் ஒருவரின் தலையை கடிக்க முயன்ற சம்பவமும், நூலிழையில் அவர் உயிர் தப்பிய திகில் காட்சிகளும் கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த பகீர் சம்பவங்கள் அடங்கிய காட்சிகள் கொண்ட வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. இந்த அதிர்ச்சியடைய செய்யும் வீடியோ நார்த் மேல் அட்டோலின் தெற்கில் உள்ள ஹுல்ஹுமாலே தீவில் ஒரு சுற்றுலா பயணி கடலில் டைவிங் செய்வதை காட்டுகிறது. போதுமான பாதுகாப்பு உபகரணங்களுடன் கடல் நீரில் மூழ்கி அவர் நீந்தி கொண்டிருக்கையில் திடீரென ஒரு டைகர் ஷார்க் ரக சுறா ஒன்று அவரை நோக்கி பாய்வதை காண முடிகிறது. அந்த பிரமாண்ட சுறா சில நொடிகள் குறிப்பிட்ட டைவரின் தலையை தன் தாடையில் பிடித்துக் கொண்டு பின்னர் அவரை விட்டு வேறுபக்கம் செல்லும் காட்சியை இந்த அதிர வைக்கும் வீடியோவில் பார்க்க முடிகிறது. மேலே உள்ள வீடியோவை பார்த்தால் தெரியும், சுறா அந்த டைவரின் தலையை நன்கு ஆழமாக கவ்வி விட்டு பின்னர் விட்டு செல்வது. இந்த டைவர் சீனாவை சேர்ந்த பெண் என்பது வீடியோவை ஷேர் செய்துள்ள இன்ஸ்டா போஸ்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உண்மையிலேயே பயங்கரமானது. இருப்பினும் குறிப்பிட்ட அந்த டைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மேலும் அந்த சுறா நன்கு இறுக்கமாக கவ்வியதால் அந்தப் பெண்ணின் தலையின் பின்பகுதியில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. இதனை சரி செய்ய அந்த பெண்ணின் தலையில் 40 தையல்கள் போடப்பட்டதாகவும் அந்த போஸ்ட்டில் கூறப்பட்டுள்ளது. புலி சுறாக்கள், காளை சுறாக்கள் மற்றும் பலவகையான மீன்களை சந்திக்க பிரபலமான டைவிங் தளமான ஷார்க் டேங்கைப் பார்வையிடும் குழுவில் அந்தப் பெண் இருந்தார். southern Kaafu Atoll-ல் உள்ள ஒரு தீவான மாஃபுஷியில் இருந்து ஸ்பீட்போட் மூலம் இந்த குழு அந்த இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. பொதுவாக மாலத்தீவில் சுறா தாக்குதல்கள் அரிதானவை, பெரும்பாலான ரீஃப் சுறாக்கள் மென்மையானவை. சுறா சரணாலயங்கள் மற்றும் அவற்றை பற்றிய கற்பிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு முயற்சிகள், இந்த முக்கியமான உயிரினங்களையு,ம் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.