‘மார்க் ஆண்டனி’ படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கி வருகிறார். அஜித்தை பொறுத்தவரை ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்தார். இதில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பின்வாங்கப்பட்டது. அதேபோல, ‘குட் பேட் அக்லி’ படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். Also Read: Vishal | கை நடுக்கம்…தடுமாற்றம் ஏன்? - என்ன ஆச்சு என்பது குறித்து நடிகர் விஷால் தரப்பு விளக்கம் இந்நிலையில் தற்போது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘விடாமுயற்சி’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜனவரி இறுதியில் இந்தப் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. Ajith | அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு Published by: Khalilullah S Last Updated: January 06, 2025 5:21 PM IST Ajith | ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. Follow us on Google News Link copied! Share this Article WhatsApp facebook Twitter telegram copy link ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கி வருகிறார். அஜித்தை பொறுத்தவரை ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்தார். இதில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் பின்வாங்கப்பட்டது. அதேபோல, ‘குட் பேட் அக்லி’ படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். Also Read: Vishal | கை நடுக்கம்…தடுமாற்றம் ஏன்? - என்ன ஆச்சு என்பது குறித்து நடிகர் விஷால் தரப்பு விளக்கம் இந்நிலையில் தற்போது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘விடாமுயற்சி’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜனவரி இறுதியில் இந்தப் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. tags : Actor Ajith Cinema Latest News Location : Tamil Nadu First Published : January 06, 2025 5:21 PM IST தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / Ajith | அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு View More Next Article None
Popular Tags:
Share This Post:

