டெல்லி சட்டசபை மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. HMPV வைரஸ் தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர கவனம் செலுத்த வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் இது தொடர்பாக விவாதிக்கவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளார் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் – UGC வெளியிட்டுள்ள புதிய விதிகளின் வரைவு அறிக்கையில் தகவல் தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யூஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் – புதிய விதி; மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் – யூ.ஜி.சி.; புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது 2ஆவது நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன், மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானங்களை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு. அவை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு; மீண்டும் நாளை(ஜன.8) காலை 09:30 மணிக்கு அவைக்கூடும். அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமைக்கு எதிராக சட்டமன்ற பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏ-க்கள் தொடர்ந்து 2 ஆவது நாளாக யார் அந்த சார்? என்ற பேட்ஜை அணிந்து வந்துள்ளனர். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் 2ஆம் நாளான இன்று (ஜன.07) இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம். இரங்கல் தீர்மானத்திற்குப்பின் இன்றைய அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திபெத் – நேபாள எல்லை அருகே ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 7.1 ஆக பதிவாகி உள்ளது. நேபாள எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் மேற்குவங்கத்தில் நில அதிர்வு உணரப்பட்டது தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள். None
Popular Tags:
Share This Post:
