கால மாற்றத்திற்கு ஏற்ப படுகர் இன மக்களின் வாழ்வாதாரம் மாற்றமடைந்தாலும், இவர்களது பாரம்பரியமான சடங்கு முறைகள் மற்றும் திருவிழாக்களுக்கு என்றுமே முன்னுரிமை அளிக்கின்றனர். முன்பொரு காலகட்டங்களில் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவின் பிறகு மேய்ச்சல் நிலங்கள் குறைந்து இருந்ததால் மாடுகளை அடர்ந்த வனப்பகுதி அருகில் மேய்ச்சலுக்கு அனுப்பி வைப்பர். அப்போது மாடுகளுக்கு உப்பு நீரைக் கொடுத்து இந்த இடத்தின் ஞாபகத்தை ஏற்படுத்துவர். இந்தத் திருவிழாவிற்குப் பின்னரே முக்கியமான அனைத்துத் திருவிழாக்களும் நடைபெறுகிறது. இந்தச் சடங்கின் போது அதிகாலை நேரத்தில் மாட்டின் பாலைக் கறந்து, பாரம்பரியமான ஒனை எனப்படும் மூங்கில் தட்டையில் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபாடு செய்கின்றனர். இதையும் படிங்க: Toda People New Year: எங்களுக்கு இன்னைக்கு தான் புத்தாண்டு... பாரம்பரிய மொற் பர்த் பண்டிகை கொண்டாடிய தோடர் மக்கள்... அதன் பின்னர் அருகாமையில் உள்ள ஊற்று நீரிலிருந்து 2 குழிகளை வெட்டி அந்தக் குழிகளில் நீரை நிரப்பி அந்த நீரில் அணைத்து வீடுகளிலிருந்தும் பெறப்பட்ட உப்பினைக் கலக்கின்றனர். உப்பு நீரைப் பருகுவதால் அந்த மாடுகள் எந்த இடத்திற்குச் சென்றாலும் அதன் பூர்வீகம் இதுதான் என நினைவில் கொள்ளும் என்பது ஐதீகமாக உள்ளது. முன்பொரு காலத்தில் வளர்ப்பு எருமைகளுக்கே அதிகமாக இந்தச் சம்பிரதாயத்தைப் பின்பற்றி உள்ளனர். தற்பொழுது எருமை வளர்ப்பு குறைந்து பசு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பசு மாடுகளை வைத்து இதனைப் பின்பற்றுகின்றனர். பின்னர் அனைவரும் “ஹௌ ஹௌ” எனச் சத்தத்துடன் தொட்ட மனை எனப்படும் என்ற இடத்திற்கு வந்து அனைவரும் முள்ளி இலை மீது உப்பினை வைத்து வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அங்கு வரும் அண்ணன் தம்பி முறைக்காரர்கள் மற்றும் மாமன் முறைக்காரர்களுக்கு அனைவரும் ஒன்றிணைந்து மோர் குடிப்பதற்கு வழங்குகின்றனர். இதையும் படிங்க: Pykara Lake Boat House: பைக்காராவில் பட்டையைக் கிளப்பும் படகு சவாரி... குதுகலிக்கும் சுற்றுலாப் பயணிகள்... முன்னோர் காலத்திலிருந்து இன்று வரையிலும் இவர்களது இந்தப் பாரம்பரியச் சடங்கு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதே போல தோடர் பழங்குடி மக்களும் இன்றைய தினம் உப்பு சாஸ்திரம் செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None