இந்த திருவிழா முத்தநாடு மந்து என்ற மந்தில் தலைமை இடமாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்த இடத்திற்கு அனைத்து மந்தில் இருந்தும் ஆண்கள் வருகை புரிவர். அனைவரும் ஒன்றிணைந்து பாரம்பரிய ஒலியை எழுப்பி இந்த கோவிலுக்கு நடந்து வருகின்றனர். பின்னர் தோடர் ஆண்களின் எண்ணிக்கையைக் கண்டறியும் விதமாகப் பாரம்பரியமாகக் காணிக்கை கட்டும் நிகழ்வு நடைபெறுகிறது. அதன் பின்னர் இவர்களது கோவில்களில் காணிக்கை செலுத்தி பாரம்பரிய நடனமாடிய பின்னர் தோடர் இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி மகிழ்கின்றனர். அதன் பின்னர் தெய்வத்திற்குப் படையல் இட்ட மோரினை பச்சை இலையில் மூன்று முறை தாகம் தனிய அனைவரும் பருக்கின்றனர். இவர்களது இந்த வித்தியாசமான வழிபாட்டு முறை முன்னோர்கள் காலத்திலிருந்து இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதையும் படிங்க: Sathuragiri: சதுரகிரியில் அருள்பாலிக்கும் 5 லிங்கம்... யாரும் தரிசிக்க முடியாத மகாலிங்கம் பற்றி தெரியுமா... தோடர்களின் தாய் மந்தான முத்தநாடு மந்து பகுதியில் உள்ள தங்களின் பாரம்பரியக் கூம்பு வடிவமான கோவிலில் அனைத்துத் தோடர் மக்களும் ஒன்று கூடி பாரம்பரிய 'மொற்பர்த்' புத்தாண்டு பண்டிகையைக் கொண்டாடினர். இதுகுறித்து தில்தாஸ் குட்டன் கூறுகையில், “இதில் முதலில் காணிக்கை செலுத்துவோம், காணிக்கை செலுத்திய பிறகு தான் எத்தனை ஆண்கள் தோடர் இனத்தில் உள்ளனர் என்பது தெரியும். இந்த பண்டிகைக்குப் பின்னரே அடுத்த எல்லாப் பண்டிகைகளும் நடைபெறும். 11:55 மணிக்கு முன்னர் இங்கு வந்து அனைவரும் வழிபாடு செய்வோம். அதன் பின்னர் நடனமாடி அடுத்து வரும் பண்டிகைகள் குறித்து ஆலோசித்து இளவட்டக் கல்லைத் தூக்கி அதன் பின்னர் சாப்பிட்டுக் கிளம்பி விடுவோம்” எனத் தெரிவித்தார். மேலும், தோடர் நபர் ஒருவர் கூறுகையில், “வருட வருடம் ஆண்கள் மட்டுமே காணிக்கை செலுத்துவர் கடந்த ஆண்டு விட இதில் 10 பேர் கூடி உள்ளனர்” எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: Muttom Beach: 6 மணி நேரத்திற்கு ஒருமுறை மாறும் கடல்... அழகும் ஆச்சரியமும் நிறைந்த முட்டம் கடற்கரை... இந்த கொண்டாட்டத்தைக் காண வந்த சுற்றுலாப் பயணி பியூலா தெரிவிக்கையில், “இது வித்தியாசமான வழிபாடாக இருந்தது. அனைவரும் ஒன்று கூடி காணிக்கை செலுத்தினர், அதன் பின்னர் நடனம் ஆடினர். அனைவரையும் நன்றாக உபசரித்தனர். இளைஞர்களின் வலிமையைக் காண்பிப்பதற்காக இளவட்டக் கல்லை தூக்கினர். இவர்களது இந்த வித்தியாசமான வழிபாடு மிகவும் பிடித்திருந்தது” எனத் தெரிவித்தார். மேலும் தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் தெரிவிக்கையில், “தலைமை கோவிலான கூம்பு வடிவ கோவிலில் உள்ள புற்களைப் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிப்பார்கள். அந்த சமயத்தில் அனைத்து மந்திலிருந்தும் அனைவரும் வருகை புரிந்து அனைவரும் ஒரு பிடி புற்களையாவது கோவிலுக்கு எடுத்துச் செல்வர். தோடர் சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொரு ஆண்மகனும் ஒரு ரூபாய் காணிக்கை செலுத்துகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 77 பேர் கூடுதலாகக் காணிக்கை செலுத்தியுள்ளனர் என தெரிவித்தார். மேலும் எங்களுடைய கோயில் எருமைகள் வேற எங்கும் கிடைக்காது. 14 கோவில்களிலும் 14 எருமைகள் இருக்கின்றது. இந்த எருமைகளைக் கோவிலுக்காக மட்டுமே வளர்த்து வருகிறோம். இதையும் படிங்க: Pongal Celebration: தமிழர் பாரம்பரிய உடையில் கலக்கிய வெளிநாட்டவர்கள்... குலவையிட்டு பொங்கல் வைத்து அசத்தல்... காணிக்கை செலுத்திய பின்னர் இளைஞர்கள் இளவட்டக் கல்லைத் தூக்கி பாரம்பரிய இசை பாடி நடனமாடி அனைவரும் கூடி கலந்து ஆலோசித்து ஒரு சில முடிவுகளை எடுப்போம். அதன் பின்னர் அனைவருக்கும் பால் சோறு வழங்கப்படும். இந்த கோவிலுக்கு ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தி வருகின்றனர். பெண்கள் யாரும் இதில் கலந்து கொள்வதில்லை. இந்த கோவிலின் எல்லையைத் தாண்டி பெண்கள் யாரும் சொல்வதில்லை” என்றார். இதுகுறித்து தோடர் பழங்குடியின பெண்மணி லீலாவதி கூறுகையில், “இந்த புத்தாண்டின் பொழுது அனைத்து ஆண்களும் கோவிலுக்கு செல்வார்கள். அந்த கட்டிடத்தைத் தாண்டி பெண்கள் அனுமதி இல்லை. ஆண்களும் பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சீலை அணிந்து செல்வர்கள் . இன்றைய தலைமுறை வரையிலும் பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகின்றனர். இன்றுவரையிலும் குழந்தைகளுக்குப் பாரம்பரியப் பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். இனி வரும் காலங்களில் எந்த அளவில் பின்பற்றுவர் என்பதை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. பெண்கள் கோவிலுக்குச் செல்லக்கூடாது என்கிற பாரம்பரியத்தை நாங்கள் முழு மனதுடன் பின்பற்றி வருகிறோம். கடவுள் எங்கிருந்தாலும் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். இதெல்லாம் நாங்கள் பாரம்பரிய முறைப்படி தொடர்ந்து பயணிப்போம்” எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: Pongal Special Train: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை... தென் மாவட்டங்களுக்குச் சிறப்பு ரயில்... உலக அளவில் பல்வேறு திருவிழாக்கள் நிகழ்வுகள் நடைபெற்றாலும் பழங்குடி இன மக்களின் பாரம்பரிய மாறாத வழிபாட்டு முறை என்பது அவர்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None