SPORTS

Virat Kohli: இந்தியாவை விட்டு வெளியேறும் கோலி.. எங்கே குடிபெயர்கிறார் தெரியுமா? - உறுதியான தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் குடிபெயர இருப்பது உறுதியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி. இந்திய அணிக்கு பல முக்கியமான போட்டிகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்துள்ளார். உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருடன் விராட் கோலி சர்வேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். தற்போது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார். அதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் அவர் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் ஓய்வுக்கு பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. சமீப காலகட்டத்தில் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் நிறைய நாட்களை லண்டனில் செலவிட்டனர். அவர்கள் இருவரும் லண்டனை சுற்றி வந்த புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டன. மேலும், இவர்களின் இரண்டாவது குழந்தையும் லண்டனில் பிறந்தது. இதை வைத்து அவர்கள் இருவரும் லண்டனில் குடியேறுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. இதுவரை வதந்திகளாக இருந்த அந்த தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் பகிர்ந்துள்ள தகவலில், “ஆம், விராட் தனது குழந்தைகள் மற்றும் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் லண்டனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அவர் இந்தியாவை விட்டு விரைவில் வெளியேற போகிறார். கோலி கிரிக்கெட்டைத் தவிர்த்து தனது பெரும்பாலான நேரத்தை குடும்பத்துடன் செலவிடுகிறார். அதனால் இந்த முடிவை எடுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவை பெரும்பாலானவரால் அடையாளம் காண முடியாது. அதுவே இந்தியாவில் எங்கு சென்றாலும் விராட் கோலியால் சாதாரணமாக இருக்க முடியாது. இதனால் அவர்களால் சாதாரண மக்களை போன்ற வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதால் இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனுக்கு செல்லும் முடிவை விராட் - அனுஷ்கா தம்பதி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கேற்ப ஏற்கனவே, அனுஷ்கா சர்மாவும் விராட் கோலி இணைந்து லண்டனில் சில தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்த நிலையில், அங்கு சில சொத்துக்களையும் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பின்னணியில் விராட் கோலி தனது ஓய்வின் முடிவில் லண்டனுக்கு குடிபெயர்வது உறுதியாகியுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.