WPL Mini Auction 2025 Latest News: இந்தியன் பிரீமியர் லீக் (IPL) எனப்படும் ஆடவருக்கான டி20 லீக் தொடர் இந்தியாவில் வருடாவருடம் நடைபெறும். அதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளாக மகளிருக்கும் டி20 லீக் தொடர் இந்தியாவில் நடைபெறகிறது. WPL என்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரான இதன் மூன்றாவது சீசன் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான மினி ஏலம் இன்று நடைபெறுகிறது. மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளிட்டவை WPL தொடரிலும் பங்கேற்கின்றன. இத்துடன் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் உபி வாரியர்ஸ் என மொத்தம் 5 மகளிர் அணிகள் WPL தொடரில் பங்கேற்கின்றன. 2023ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2024ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. அந்த வகையில், இந்த மினி ஏலம் மீதும் கடும் எதிர்பார்ப்பு இருந்தது. WPL மினி ஏலம் மினி ஏலத்தில் அணியை கட்டமைக்க மொத்தம் தலா ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டது. அந்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி அதிகபட்ச தொகையுடனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குறைந்த தொகையுடனும் இந்த மினி ஏலத்திற்கு வந்துள்ளது. இதில் குஜராத் அணிக்கு 4 இடங்கள் காலியாக இருந்தன, அதில் 2 வெளிநாட்டு வீராங்கனைகளுக்கானது. அதனால் அவர்கள் ரூ.4.4 கோடியுடன் வந்தனர். உத்தர பிரதேசம் அணி 1 வெளிநாட்டு இடம் உள்பட 3 காலியிடத்துடன் ரூ.3.95 கோடி கையிருப்பு உடன் வந்தது. மேலும் படிக்க | சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா கொடுத்த சர்பிரைஸ் - சுப்மன் கில் ஷாக்..! டெல்லி அணி 1 வெளிநாட்டு இடம் உள்ளிட்ட 4 காலியிடத்துடன் ரூ.2.5 கோடியுடன் வந்தது. மும்பை அணி 1 வெளிநாட்டு இடம் உள்ளிட்ட 4 காலியிடத்துடன் ரூ.2.65 கோடியுடன் வந்தது. பெங்களூரு அணியில் 4 உள்நாட்டு வீராங்கனைக்களுக்கான இடம் காலியாக உள்ளது. அவர்களிடம் ரூ.3.25 கோடியுடன் வந்தது. WPL தொடரின் மினி ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. 19 வீராங்கனைக்கு மட்டுமே காலியிடம் இருக்கும் நிலையில், 120 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஜி. கமலினி - ரூ.1.60 கோடி அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணி தனது கையில் இருந்த ரூ.2.65 கோடியில், ரூ.1.60 கோடியை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஜி.கமலினியை (G Kamalini) எடுத்துள்ளது. அந்தளவிற்கு பெரிய தொகையை கொடுத்து எடுத்ததற்கு என்ன காரணம், யார் அவர் என்பதை இங்கு விரிவாக காணலாம். கமலினி ரூ.10 லட்சத்தை அடிப்படை தொகையாக வைத்து முதலில் ஏலம் விடப்பட்டார். இவருக்கு டெல்லி மற்றும் மும்பை இடையே கடுமையான போட்டி நிலவியது. இருவரும் மாறி ஏலம் கேட்க ரூ.1.60 கோடிக்கு மும்பை இறுதியாக தட்டித்தூக்கியது. கமலினி உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக இந்த ஏலத்தில் அவருக்கு அதிக டிமாண்ட் எழுந்துள்ளது. யார் இந்த ஜி. கமலினி? 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி கமலினி 311 ரன்களை குவித்துள்ளார். அந்த தொடரில் அதிக ரன்களை குவித்தவர்களின் பட்டியலில் கமலினிதான் இரண்டாம் இடம் ஆவார். இந்த தொடரில் தமிழ்நாடு கோப்பையை வெல்லவும் அவர் முக்கிய பங்காற்றினார். இடதுகை பேட்டரான அவர் அந்த தொடரில் மொத்தம் 10 சிக்ஸர்களை அடித்து, தொடரின் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் மற்றொரு வீராங்கனையுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார். இவரின் சிக்ஸர் விளாசும் திறனுக்கு இத்தனை டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது. #AaliRe #TATAWPL #TATAWPLAuction #MumbaiIndians pic.twitter.com/AOo2D4G9xj — Mumbai Indians (@mipaltan) December 15, 2024 19 வயதுக்குட்பட்டோருக்கான முத்தரப்பு தொடரில் (U19 Women's Tri Series) தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா பி அணி சார்பில் 79 ரன்களை குவித்து பலரின் கவனத்தை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து, முதல்முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடர் (U19 Women's Asia Cup) வரும் டிச.22ஆம் தேதி மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணியில் ஜி. கமலினி இடம்பெற்றுள்ளார். மேலும் இவர் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர் ஆவார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | ரோஹித் சர்மா செய்த மிகப்பெரிய தவறுகள்... இக்கட்டான நிலையில் இந்திய அணி - இனி மீள வழி இருக்கா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:


What’s New
Spotlight
Today’s Hot
தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்? வைரலான வீடியோவால பரபரப்பு!
- By Sarkai Info
- January 6, 2025
Featured News
வாழ்வில் வெற்றி பெற..ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து கற்க வேண்டிய பாடங்கள்!
- By Sarkai Info
- January 6, 2025
Latest From This Week
சென்னையில் HMPV வைரஸ்... 2 குழந்தைகளுக்கு பாதிப்பு... மக்களே ஜாக்கிரதை!
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம்... விலை.... சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விபரங்கள்
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
வலது கையில் ஏன் நகம் வளர்க்க கூடாது? ‘இந்த’ 7 பிரச்சனைகள் வரும்..
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.