இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. பாக்ஸிங் டே டெஸ்டாக மெல்போனில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் மெல்போனுக்கு வந்தடைந்தனர். அந்த சமயத்தில் விராட் கோலி விமான நிலையத்தில் ஒரு பெண் நிரூபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது குடும்பத்தை நோக்கி அந்த நிருபர் கேமராவை வைத்திருந்ததால் விராட் கோலி கோபம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் படிக்க | Ravichandran Ashwin: சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் செய்துள்ள சாதனைகள்! முழு பட்டியல்! தனது குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியே வரக்கூடாது என்று விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தீவிரமாக பார்த்து வருகின்றனர். எனவே விமான நிலையில் தனது குழந்தைகளை நோக்கி கேமரா இருந்ததால் என்பதால் விராட் கோபமடைந்துள்ளார். "விமான நிலையத்தில் விராட் கோலி தன் குடும்பத்தை நோக்கி கேமரா இருந்ததும், தனது குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியே வந்து விடுமோ என்று கோபம் அடைந்தார், பின்பு அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது" என்று நிருபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "எனது குழந்தைகளுக்கும், எங்களுக்கும் கொஞ்சம் தனியுரிமை தேவை. எனவே எனது அனுமதி இல்லாமல் அவர்களை புகைப்படம் எடுக்க முடியாது" என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். பின்னர் உங்கள் குடும்பத்தை புகைப்படம் அல்லது வீடியோக்களை எடுக்க வில்லை என்று நிருபரும், கேமரா மேனும் கூறவே பின்னர் அங்கிருந்து புறப்பட்டு உள்ளார் விராட் கோலி. Indian cricket superstar Virat Kohli has been involved in a fiery confrontation at Melbourne Airport. @theodrop has the details. #AUSvIND #7NEWS pic.twitter.com/uXqGzmMAJi — 7NEWS Melbourne (@7NewsMelbourne) December 19, 2024 பார்டர் கவாஸ்கர் தொடர்! தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் விராட் கோலி ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் சதம் அடித்தாலும், அதனை தொடர்ந்து ரன்கள் அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒரு சதம் தவிர 5, 7, 11 மற்றும் 11 மட்டுமே அடித்துள்ளார். இதற்கு முன்பு விராட் கோலி ஆஸ்திரேலிய மண்ணில் 7 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் இந்த முறை ரன்கள் அடிக்கவே சிரமப்பட்டு வருகிறார். இது ரசிகர்கள் மனதில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் 2 டெஸ்ட் உள்ளது மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இரு அணிகளும் பாக்சிங் டே டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால் அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆன நிலையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க | அஷ்வின் இடத்தை பிடிக்கப்போவது சுந்தர் இல்லை! இந்த 26 வயது இளம் வீரர் தான்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:
What’s New
டிங்கா டிங்கா வைரஸ் தாக்கி டான்ஸ் ஆடும் பெண்! இதென்னங்க புதுசா இருக்கு?
- By Sarkai Info
- December 20, 2024
நன்றாக காதலிக்க தெரிந்த 5 ராசிகள்! எந்தெந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
- By Sarkai Info
- December 20, 2024
Spotlight
Today’s Hot
மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற டாப் 5 மத்திய அரசு நலத்திட்டங்கள்
- By Sarkai Info
- December 20, 2024
ஓவர் புரட்சி! விடுதலை 2 படம் எப்படி? ட்விட்டர் X தள விமர்சனம்!
- By Sarkai Info
- December 20, 2024
பணிபுரியும் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அடுத்த குட்நியூஸ்...!
- By Sarkai Info
- December 20, 2024
Featured News
Latest From This Week
நெல்லையில் சாதி வன்ம படுகொலை? நீதிமன்ற வாசலில் துடிதுடித்து இறந்த இளைஞர் - பரபரப்பு பின்னணி
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
Budget 2025: அந்த குட் நியூஸ் வருகிறதா? EPF ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்?
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
ஓப்பனரை வீட்டுக்கு அனுப்பிய ஆஸ்திரேலியா... உள்ளே வரும் மாஸ் வீரர் - இந்தியாவுக்கு பெரிய பிரச்னை
TAMIL
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.