SPORTS

மகளிர் டி20 உலகக்கோப்பை : 8 கேட்ச்கள் கோட்டை.. 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட்... நியூசிலாந்திற்கு வழிவிட்டதா பாகிஸ்தான்?

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்தது. இதே குரூப்பில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு எளிதாக முன்னேறியது. அடுத்த அணி யார் என்ற ரேஸில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இந்திய அணி இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து தோற்றால் ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது. எனினும், துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, குரூப்பில் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. 4 புள்ளிகளை மட்டுமே பெற்ற இந்திய அணி, தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. Also Read | டி.எஸ்.பி. முகமது சிராஜ் மட்டுமல்ல… அரசு பொறுப்பில் இருக்கும் 5 கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா? இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி எளிய இலக்கை வெற்றி பெற சற்றும் முயற்சி செய்யாமல் இருந்தது போன்றே இருந்தது. பாகிஸ்தான் அணி போட்டிப்போட்டு கொண்டு விக்கெட்களை பறிகொடுத்தது. அந்த அணியில் இருவர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். அந்த அணியின் கேப்டன் 21 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்னாகும். இறுதியில் பாகிஸ்தான் அணி 56 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணி பேட்டிங், பவுலிங் மற்றும் ஃப்ல்டீங் என அனைத்திலும் வெற்றிக்கான எந்த முயற்சியும் இல்லாதது போன்றே இருந்தது. நியூசிலாந்து பேட்டிங்கின் போது பாகிஸ்தான் ப்ளேயர்ஸ் 8 கேட்ச்களை கோட்டை விட்டனர். பாகிஸ்தான் வெற்றி பெறுவதை விட இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைய கூடாது என்ற விதத்தில் அவர்கள் விளையாடினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.