TAMIL

CSK: பலமான அணியை உருவாக்க... ஏலத்தில் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்களை சிஎஸ்கே எடுக்கும்!

IPL 2025 Mega Auction: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) ஐபிஎல் தொடரிலேயே வெற்றிகரமான அணிகளுள் ஒன்றாகும். சிஎஸ்கே அணியும் மும்பை அணியும்தான் தலா 5 முறை சாம்பியனாக கோப்பையை கைப்பற்றி உள்ளன. மொத்தம் 17 சீசன்களில் இந்த அணிகளே 10 முறை கோப்பையை வென்றுவிட்டன. இதில் சிஎஸ்கே அணி 2010, 2011ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பின்னர் சுமார் 6 ஆண்டுகள் கழித்து 2018ஆம் ஆண்டில் கோப்பையை வென்றது. 2018ஆம் ஆண்டுக்கு பின் 2019இல் இறுதிப்போட்டி வரை வந்து மும்பையிடம் தோற்றது. அதற்கடுத்து 2020ஆம் ஆண்டில் பிளே ஆப் கூட வராத சிஎஸ்கே அணி (CSK) 2021ஆம் ஆண்டில் கோப்பையை வென்று மிரட்டியது. அதாவது, இதே நாளில்தான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சிஎஸ்கே கோப்பையை வென்றிருந்தது. 2022இல் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறாமல் சிஎஸ்கே வெளியேற நேர்ந்தது. ஆனால் அதன்பின்னும் மீண்டும் வந்து சிஎஸ்கே கோப்பையை 2023இல் தட்டித்தூக்கியது. அதன்பின் கடைசியாக 2024இல் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் 5ஆவது இடத்தோடு சிஎஸ்கே வெளியேற நேர்ந்தது. சிஎஸ்கேவின் ஆஸ்திரேலிய வீரர்கள் தோனி தலைமையில்தான் சிஎஸ்கே 5 கோப்பைகளையும் வென்றது. 2022 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் முறையே ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்பட்டனர். 2022இல் பாதி போட்டிகளையும், 2020ஆம் ஆண்டில் அனைத்து போட்டிகளிலும் தோனி கேப்டனாக செயல்பட்டார். அதாவது தோனியின் தலைமையில் 2020ஆம் ஆண்டில் மட்டுமே சிஎஸ்கே பிளே ஆப் வராமல் வெளியேறியது. மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே குறைந்தபட்சம் பிளே ஆப் வந்திருக்கிறது. 2016, 2017இல் தடைக்காரணமாக சிஎஸ்கே விளையாடாததும் குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க |CSK: மீண்டும் சாம்பியன் ஆக... சிஎஸ்கே குறிவைக்கும் இந்த 3 இங்கிலாந்து வீரர்கள் சிஎஸ்கேவின் இந்த வெற்றிக்கு தோனி (MS Dhoni) மட்டுமின்றி அந்த அணியின் பாரம்பரிய மிக்க வியூகங்களே முக்கிய காரணமாக உள்ளது. இந்த வியூகங்களில் வெளிநாட்டு ஓப்பனர், வெளிநாட்டு மிடில் ஆர்டர் பேட்டர்கள் நிச்சயம் இருப்பார்கள். அந்த வகையில், இந்த வெளிநாட்டு வீரர் ஸ்லாட்டுக்கு சிஎஸ்கே அணி எப்போதுமே ஆஸ்திரேலிய வீரர்களை வாங்க அதிக ஆர்வம் காட்டும். மேத்யூ ஹைடன், மைக்கல் ஹசி, ஜார்ஜ் பெய்லி, ஷேன் வாட்சன் ஆகியோர் சிஎஸ்கேவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்கள். இந்நிலையில் வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி குறிவைக்கும் மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் குறித்து இங்கு காணலாம். டிம் டேவிட் டிம் டேவிட்டை (Tim David) மும்பை அணி நிச்சயம் தக்கவைக்காது. மீண்டும் அணியில் எடுக்க வாய்ப்பும் இல்லை. ஏனென்றால் தற்போது ஹர்திக் பாண்டியா அந்த ஃபினிஷர் ரோலுக்கு இருக்கிறார் என்பதால் மும்பை அணி மீண்டும் அவரை வாங்க ஆர்வம் காட்டாது. எனவே, சிஎஸ்கே இவரை மிடில் ஆர்டர் பினிஷர் ரோலுக்கு வாங்கிக்கொண்டால் சிஎஸ்கேவுக்கு அடுத்த மூன்று ஆண்டுகள் சிறப்பான சொத்தமாக இருப்பார். டேவிட் வார்னர் வயதான வீரர்களின் புகலிடம் என்று அறியப்படும் சிஎஸ்கே அணிதான் டேவிட் வார்னருக்கு (David Warner) தற்போது சரியான இடம். டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் கிடைக்காதபட்சத்தில் வார்னரை குறைந்த ரேட்டில் சிஎஸ்கே தூக்கினால் ஓப்பனிங்கில் கெத்து காட்டலாம். சிஎஸ்கேவுக்கு ஒருவர் வந்துவிட்டால் நிச்சயம் அவரிடம் பெரும் மாற்றத்தை நாம் காண்போம். எனவே, டேவிட் வார்னருக்கு சிஎஸ்கே நிச்சயம் போகும் எனலாம். மிட்செல் ஸ்டார்க் ஸ்டார்க் (Mitchell Starc) குறைந்த தொகையில் கிடைக்க மாட்டார். அதுமட்டுமின்றி பதிரானாவும் சிஎஸ்கேவில் இருப்பதால் இரண்டு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை சிஎஸ்கே எடுக்குமா என்ற கேள்வி உள்ளது. ஆனால், இவர் கேகேஆர் அணிக்கு கடந்தாண்டு வந்தது கடைசி நேரத்தில் பெரிய அதிர்ஷ்டமாக இருந்தது. அதிக தொகைக்கு வாங்கினாலும் கோப்பையை வெல்ல பிளே ஆப் சுற்றில் ஸ்டார்க்கின் பந்துவீச்சுதான் வழிவகுத்தது. அந்த வகையில் கடந்த முறை முஸ்தபிஷூர் ரஹ்மான் இடத்தில் ஸ்டார்க்கை தூக்கினால் நிச்சயம் சிஎஸ்கே மீண்டும் சாம்பியன் ஆகும் வாய்ப்பு பிரகாசமாகும். மேலும் படிக்க | கேஎல் ராகுல் வேண்டாம்... ஏன் இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் விளையாட வேண்டும் - 3 முக்கிய காரணங்கள் சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.