TAMIL

இந்திய அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமனம்! எந்த தொடரில் தெரியுமா?

ஹாங்காங் சிக்ஸஸ் 2024 (Hong Kong Sixes 2024) போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் டின் குவாங் சாலை கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 6 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி, ஸ்டூவர்ட் பின்னி, பாரத் சிப்லி, கோஸ்வாமி, நதீம் உள்ளிட்ட முன்னாள் இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அணிக்கு ராபின் உத்தப்பா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படிக்க | இந்திய கிரிக்கெட் பிளேயர்களுக்கு மெகா ஜாக்பாட்! தீபாவளி போனஸ் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? கடைசியாக 2017ம் ஆண்டு நடைபெற்ற இந்த ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டி தற்போது மீண்டும் நடைபெற உள்ளது. வித்தியாசமான முறையில் வேகமாக நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 12 நாடுகள் போட்டியிட உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 6 ஆட்டங்களில் விளையாடும். ஆக்ரோஷமாக நடைபெறும் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த தொடருக்கு பிசிசிஐ யாரை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீனியர் வீரர்களை அனுப்ப உள்ளது. SQUAD ANNOUNCEMENT Here’s India’s Squad for the upcoming Hong Kong Sixes! Look forward to an exciting tournament where The Men in Blue will showcase their amazing skills and lively energy! Expect More Teams, More Sixes, More Excitement, and MAXIMUM THRILLS! HK6 is… pic.twitter.com/fdz3klixvC — Cricket Hong Kong, China (@CricketHK) October 12, 2024 ஹாங்காங் சிக்ஸர்: இந்தியா அணி ஹாங்காங் சிக்ஸரில் இந்தியா இந்தியாவும் பாகிஸ்தானும் C அணியில் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டி நவம்பர் 1 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 3வது அணியாக இந்த குழுவில் உள்ளது. குரூப் Aவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் Bயில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நேபாளம் அணிகள் உள்ளன. குரூப் Dயில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஓமன் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடர் மொத்தம் 12 குரூப்-ஸ்டேஜ் போட்டிகள் மற்றும் காலிறுதிப் போட்டிகள் கொண்ட வடிவமையில் நடைபெறும். அரையிறுதி போட்டிகள் நவம்பர் 3ம் தேதி நடைபெறும். மேலும் அதே நாளில் கிண்ண இறுதி, பிளேட் இறுதி மற்றும் கோப்பை இறுதிப் போட்டிகளும் நடைபெறும். உத்தப்பா, ஜாதவ், திவாரி மற்றும் பின்னி போன்ற சீனியர் வீரர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2017ம் நடைபெற்ற பதிப்பில் தென்னாப்பிரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும் படிக்க | IND vs NZ: நாள் நெருங்கிவிட்டது... இந்திய அணி அறிவிப்பு எப்போது? எந்த 16 வீரர்களுக்கு வாய்ப்பு? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.