SPORTS

ரன் அவுட் இல்லையா? இந்தியா - நியூசிலாந்து போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் வாக்குவாதம்!

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர்ரை ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட் செய்த நிலையில், நடுவர் அவுட் கொடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா வீசிய 14 ஆவது ஓவரின் கடைசி பந்தில் அமெலியா கெர், லாங் ஆஃப் திசையில் அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார். தொடர்ந்து அமெலியா கெர் 2 ஆவது ரன்னை எடுப்பதற்காக ஓட, ஹர்மன்பிரீத் கவுர் பந்தை பிடித்து நேராக விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷை நோக்கி வீசினார். அதனை தாவி பிடித்த ரிச்சா கோஷ், உடனடியாக ரன் அவுட் செய்து அசத்தினார். இதனால், அமெலியா கெர் களத்தில் இருந்து பெவிலியனை நோக்கி நடந்தார். ஆனால், மூன்றாவது நடுவர் அமெலியா கெர்ரை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தார். இதையும் படிக்க: மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து.. முதல் ரன் ஓடி முடித்ததும் ‘ஓவர்’ முடிந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும், அதன்பின் நியூசிலாந்து வீராங்கனைகள் 2 ஆவது ரன்னிற்கு முயற்சி செய்ததாகவும், இதனால் நியூசிலாந்து வீராங்கனைகளுக்கு தண்டனை கொடுக்காமல், விட்டதும் தெரியவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடுவர்களுடன் ஹர்மன்பிரீத் கவுர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். Whatever may be the decision of the third party, the match is not exciting By the way, the third umpire's decision was not good, it seems to be biased. #INDvNZ #TheTribeonprime #Earthquakes #FayeYoko pic.twitter.com/mtNC4PSx3J இந்தப் போட்டியில் இந்திய அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி நாளை பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. மாலை 3 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டி, துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.