SPORTS

IND vs BAN | கான்பூர் டெஸ்ட்: 17 ஓவர்களில் இலக்கை கடந்த இந்தியா - வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்தது!

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. கான்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றியை பதிவு செய்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, கான்பூரில் 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் முதலில் ஆடிய வங்கதேச அணி, முதல் நாளன்று 107 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனை தொடர்ந்து 2 மற்றும் 3 ஆவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 4ஆம் நாளான நேற்று, வங்கதேச அணி 288 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பின்னர், பேட்டிங் ஆடிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி 34 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து, தனது 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், கடைசி நாளான இன்று, வங்கதேசம் தனது ஆட்டத்தை தொடர்ந்தது. கடந்த இன்னிங்ஸில் சதம் அடித்த மொமினுல் ஹக்கை, நாளின் தொடக்கத்திலேயே இரண்டு ரன்களுக்கு அவுட் செய்தார் அஸ்வின். தொடர்ந்து கேப்டன் நஜ்முல் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்த, மறுபக்கம் இருந்த வங்கதேச வீரர் ஷத்மன் இஸ்லாம் அரை சதம் அடித்தார். அரை சதம் முடித்த கையோடு அவரை ஆகாஷ் தீப் பெவிலியன் அனுப்பி வைத்தார். இதன்பின் ஜடேஜாவும் பும்ராவும் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்த, வங்கதேசம் தடுமாறியது. இதனால் 130 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது. அப்போது சீனியர் வீரர் முஷ்பிகுர் ரஹீம் தனி ஒருவராக அணியை மீட்க போராடினார். ஆனால், அவரின் போராட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 37 ரன்கள் எடுத்திருந்த அவரை, பும்ரா க்ளீன் போல்ட் ஆக்கினார். இதனால் வங்கதேச அணி 47 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எளிதான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு மீண்டும் ஒரு அதிரடி துவக்கத்தை கொடுத்தனர் ரோஹித் ஷர்மாவும், ஜெய்ஸ்வாலும். முதல் ஓவரில் 8 ரன்கள், இரண்டாவது ஓவரில் 10 ரன்கள் என ரன் ரேட்டை வேகப்படுத்தினர். இதையும் படிக்க | IPL 2025 | ‘இவ்வளவு தொகை கொடுப்பதை ஏத்துக்க முடியல’ - ஆர்.பி. சிங் ஆதங்கம்… ஏன்? ஆனால், மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே ரோஹித் ஷர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். 8 ரன்களுக்கு ரோஹித் ஷர்மா வெளியேற, ஷுப்மன் கில் 6 ரன்களில் அவுட் ஆனார். இரண்டு விக்கெட்கள் வீழ்ந்தாலும், மறுபக்கம் ஜெய்ஸ்வால் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். 51 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் ரிஷப் பந்த் வின்னிங் பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார். இதற்கிடையே, ஜெய்ஸ்வால் அதிரடியால் 17.2 ஓவர்களில் இந்திய அணி 95 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 29 ரன்களும், ரிஷப் பந்த் 4 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த அபார வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2 - 0 என ஒயிட்வாஷ் செய்தது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.