INTERNATIONAL

இப்படி ஒரு குப்பைத் தொட்டி இருந்தா குப்பையை கீழே போட யாருக்கு மனசு வரும்.. இணையத்தை கலக்கும் வீடியோ

தினம்தோறும் சோஷியல் மீடியாவில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் வித்தியாசமாகவும் நம்மை ஈர்க்கும்படியாகவும் இருக்கிறது. அப்படியொரு “பேசும்” குப்பைத் தொட்டியின் வீடியோ ஒன்று ஆன்லைனில் பலரது கவனத்தைப் பெற்று வருகிறது. ஹாங்காங்கின் டிஸ்னிலேண்டில் இருந்து வைரலாகி வரும் இந்த வீடியோ, குப்பைத் தொட்டி அழுவதையும், குப்பைக்காக கெஞ்சுவதையும் காட்சிப்படுத்துகிறது. குப்பை தொட்டி என்றால் சாலையோரத்தில் அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும் தானே. ஆனால் இந்த குப்பைத் தொட்டியோ அங்குமிங்கும் நகர்ந்து, குப்பைகளை என்னிடம் கொடுக்கும்படி தனித்துவமான பாணியில், மக்களிடம் கேட்கிறது. “நான் குப்பையைச் சாப்பிட விரும்புகிறேன்” என குப்பை தொட்டி கூறுவது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மக்கள் தங்கள் குப்பைகளை அப்புறப்படுத்த ஊக்குவிக்கும் இதன் தனித்துவமான அணுகுமுறையாலும் பிரத்யேக பானியாலும் கவனத்தைப் பெறுகிறது. யாராவது தங்களிடம் உள்ள குப்பைகளை இதன் உள்ளே எறிந்தால், “ஆ, என்ன சுவையாக இருக்கிறது. யும் யும் யும்!” என குப்பைத் தொட்டி மகிழ்ச்சியுடன் பதிலளிக்கிறது. மக்கள் தங்கள் குப்பைகளை அப்புறப்படுத்த ஊக்குவிப்பதே இதன் முதன்மையான குறிக்கோளாக இருந்தாலும், குப்பைத் தொட்டி பலருக்கு பொழுதுபோக்கு சின்னமாகவும் மாறியுள்ளது. @luckystarry_hung என்ற பெயரிலுள்ள இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து இந்த வைரல் வீடியோ வெளியாகியுள்ளது. பொதுமக்களை ஒரு செயலில் சந்தோஷமாக ஈடுபடுத்த தொழில்நுட்பம் மற்றும் நகைச்சுவையை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது பற்றிய விரிவான உரையாடலை இந்த வீடியோ தூண்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த வைரலான வீடியோ, “ரொம்ப கலகலப்பா இருக்கு! இதனுடன் நாள் முழுக்க நான் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்ற வாசகத்துடன் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. “நான் குப்பையை சாப்பிட விரும்புகிறேன். உண்மையில் இங்கு எதுவும் இல்லையா? ஆஆஆ! எதுவும் இல்லை, குப்பை எல்லாம் போய்விட்டது” என குப்பைத் தொட்டி பேசுவதோடு இந்த வீடியோவும் தொடங்குகிறது. ஹாங்காங் டிஸ்னிலேண்டில் உள்ள வைரலான “பேசும்” குப்பைத் தொட்டி சமூக ஊடக பயனர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. பலர் அதன் வேடிக்கையான மற்றும் ஆக்கபூர்வமான யோசனையைப் பாராட்டியுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த பல இன்ஸ்டாகிராம் பயனர்கள் வைரலான பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதன் ஆக்கப்பூர்வமான முயற்சியைப் பாராட்டியும் வருகின்றனர். “குப்பை தொட்டி இப்படிப் பேசுவதற்கு புரோகிராம் செய்யப்பட்டுள்ளதா அல்லது ரிமோட் கண்ட்ரோல் மூலம் யாராவது மைக்கில் பேசுகிறார்களா? தனிப்பட்ட முறையில் இது ஒரு உயிருள்ள பொருள் என்றே நான் நம்புகிறேன்” என ஒருவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். “இந்த அழுகைக்காகவே நான் குப்பையை வாங்கிப் போடுவேன்” என்கிறார் இன்னொரு பயனர். “என்னை விட இதற்கு சிறந்த சமூக திறன்கள் இருக்கிறதே” என்று கிண்டலான தொனியுடன் இன்னொரு பதிவர் குறிப்பிட்டுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.