INTERNATIONAL

Black ice: கருப்பு பனி என்றால் என்ன..? காரில் செல்லும்போது இதை பார்த்தால் ஒருபோதும் நிறுத்திடாதீங்க!

குளிர்காலம் அதிகரித்து வருவதால், இந்தியாவில் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாவாசிகள் பனிப்பொழிவை பார்ப்பதற்காகவே பல இடங்களுக்கு பயணம் செய்கிறார்கள். பனியை ரசிக்க இந்தியாவில் ஏராளமான இடங்கள் இருக்கும் அதே வேளையில், இந்த சாகசப் பயணம் சில ஆபத்துகளுடன் வருகிறது என்பதை நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். முதன்மையாக ‘கருப்பு பனி’ எனப்படும் நிகழ்வின் காரணமாக, நடைபயிற்சி செல்வதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் கூட மோசமான மற்றும் ஆபத்து நிறைந்த சூழ்நிலைகளை பனி உருவாக்குகிறது. இந்த மெல்லிய, பளிச்சென்று இருக்கக்கூடிய பனி அடுக்கு, மேற்பரப்பை மிகவும் வழுக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. இது பாதசாரிகள் மற்றும் வாகனங்களுக்கு கணிசமான ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. இதில் எளிதாக கார் ஓட்டலாம் என நாம் நினைக்கலாம். ஆனால் பனி மூடிய அல்லது பனிக்கட்டி நிலப்பரப்பில் காரில் செல்வது மிகவும் சவாலானது. ஏனெனில் முதலில் பார்க்கும்போது கருப்பு பனியை கவனிப்பது கடினம். துரதிர்ஷ்டவசமாக, இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஏராளமான விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. கருப்பு பனி சம்பந்தப்பட்ட சம்பவங்களால் உயிரிழப்புகளும் கூட ஏற்படுகின்றன. கருப்பு பனிக்கட்டியை எப்படி கண்டறிவது?: கருப்பு பனி பொதுவாக சாலைகளில் உருவாகிறது. ஆகையால் இதை கண்டறிவது கடினமாக இருக்கும். அதன் மெல்லிய, பளிச்சென்ற தன்மை பெரும்பாலும் சாலையின் மேற்பரப்புடன் ஒட்டிக்கொண்டு இருப்பதும் ஒரு காரணமாகும். இதன் தோற்றம் பற்றி அறிமுகமில்லாதவர்களுக்கு சாலையில் என்ன இருக்கிறது என்ற தெளிவற்ற நிலையை உண்டாக்குகிறது. காரில் பயணிகையில் கறுப்பு பனி இருக்கும் பகுதியில் பிரேக் போடும் போது, ​​வாகனங்கள் அதன் டிராக்ஷனை இழந்து, கட்டுப்படுத்த முடியாமல் வழுக்கிச் செல்வது விபத்துகளுக்கு வழிவகுக்கும். கருப்பு பனியை பாதுகாப்பாக தவிர்ப்பது எப்படி?: நீங்கள் கருப்பு பனியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு பயணிக்கிறீர்கள் என்றால், பனி மற்றும் பனிக்கட்டி நிலைமைகளைக் கையாள பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 4x4 (நான்கு சக்கரத்தில் இயங்கும் வாகனம்) வாகனத்தைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நீங்கள் கருப்பு பனியை எதிர்கொள்ளும் போது, ​​அமைதியாகவும் பதட்டப்படாமல் இருப்பதோடு பீதியை தவிர்க்க வேண்டியது அவசியம். இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கான ஒரே வழி, உங்கள் வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் உள்ளது. மிதமான வேகத்தில் சென்றாலே போதுமானது. ஆக்ஸிலேட்டரை லேசாகப் பயன்படுத்தவும். முடிந்தால், பிரேக்குகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். பிரேக்குகளைப் பயன்படுத்துவதுதான் கருப்பு பனிக்கட்டிகளில் ஏற்படும் விபத்துகளுக்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாகும். இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையில் நீங்கள் பயணித்தால், பிரேக் பிடிப்பதற்கான தூண்டுதலை நிதானித்து, ஆக்ஸிலேட்டரை படிப்படியாக குறையுங்கள். இந்த நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், நீங்கள் விபத்துக்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கலாம். அதுமட்டுமின்றி கருப்பு பனிக்கட்டி நிறைந்துள்ள இடங்களில் பாதுகாப்பாகவும் செல்லலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.