மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற கிளர்ச்சியாளர் குழு, கடந்த வாரம் போரைத் தொடங்கியது. அலெப்போ உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த கிளர்ச்சியாளர்கள், இன்று காலை தலைநகர் டமாஸ்கஸூக்குள் நுழைந்து, நகரை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் மூலம் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தங்கள் மகிழ்ச்சியை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடினர். தொடர்ந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதனிடையே டமாஸ்கஸ் நகருக்குள் கிளர்ச்சியாளர் படை நுழைந்ததைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் விமானம் மூலம் நாட்டை விட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அவர் ரஷ்யா அல்லது ஜோர்டான் நாட்டில் அடைக்கலம் புகுந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் அவர் பயணித்த விமானம் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து திடீரென தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் பஷார் அல் ஆசாத்தின் தந்தை சிலையை கிளர்ச்சியாளர்கள் தகர்த்தெறிந்தனர். மேலும் ஹோமஸ் உள்ளிட்ட நகரங்களில் சிறையிலிருந்து கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்தனர். தமிழ் செய்திகள் / உலகம் / சிரியா அதிபர் தப்பிய விமானம் என்ன ஆனது? மாளிகையை சூறையாடிய கிளர்ச்சியாளர்கள் சிரியா அதிபர் தப்பிய விமானம் என்ன ஆனது? மாளிகையை சூறையாடிய கிளர்ச்சியாளர்கள் சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்கள், அதிபர் மாளிகைக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். படிக்கவும் … 1-MIN READ Tamil International Last Updated : December 8, 2024, 6:10 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற கிளர்ச்சியாளர் குழு, கடந்த வாரம் போரைத் தொடங்கியது. அலெப்போ உள்ளிட்ட முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த கிளர்ச்சியாளர்கள், இன்று காலை தலைநகர் டமாஸ்கஸூக்குள் நுழைந்து, நகரை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் மூலம் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தங்கள் மகிழ்ச்சியை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடினர். தொடர்ந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். விளம்பரம் இதனிடையே டமாஸ்கஸ் நகருக்குள் கிளர்ச்சியாளர் படை நுழைந்ததைத் தொடர்ந்து அதிபர் பஷார் அல் ஆசாத் விமானம் மூலம் நாட்டை விட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அவர் ரஷ்யா அல்லது ஜோர்டான் நாட்டில் அடைக்கலம் புகுந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் அவர் பயணித்த விமானம் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து திடீரென தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் பஷார் அல் ஆசாத்தின் தந்தை சிலையை கிளர்ச்சியாளர்கள் தகர்த்தெறிந்தனர். மேலும் ஹோமஸ் உள்ளிட்ட நகரங்களில் சிறையிலிருந்து கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுவித்தனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Syria First Published : December 8, 2024, 6:10 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா... மக்களுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு!
December 19, 2024ரூ.85க்கு விற்கப்படும் வீடுகள்.. எங்கு தெரியுமா? - வெளியான அதிர்ச்சி காரணம்!
December 19, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 13, 2024
-
- December 8, 2024
-
- December 8, 2024
Featured News
Latest From This Week
அமெரிக்காவில் நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு
INTERNATIONAL
- by Sarkai Info
- December 6, 2024
ரஷ்யாவில் நெகிழ்ச்சி சம்பவம்.. உயிரிழந்த உரிமையாளருக்காக பனியில் காத்திருக்கும் நாய்!
INTERNATIONAL
- by Sarkai Info
- December 5, 2024
20 ஆண்டுகளாக தும்மலால் அவதிப்பட்ட இளைஞர்... காரணத்தை கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்..!
INTERNATIONAL
- by Sarkai Info
- December 5, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.