TAMIL

பென்சன் பெறும் 60, 70, 75 வயது ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்.. வங்கி புதிய சலுகை!

Pensioners New Loan Scheme Updates: அவ்வப்போது புதிய சலுகை சார்ந்த அறிவிப்புகளும், நடைமுறை மாற்றங்கள் சார்ந்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஓய்வூதியதாரர்கள் பயன்படக்கூடிய வகையில் வங்கிகளில் புதிய சலுகை சார்ந்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அகவிலைப்படி உயர்வு ஒவ்வொரு வருடமும் விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை சமாளிக்கக்கூடிய வகையில் மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம் மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அகவிலை நிவாரணம் அரசால் அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம் அளிப்பதன் நோக்கம், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்கள் அன்றாட வாழ்க்கையில் ஏற்படக்கூடிய செலவுகள் அதிகரிப்பை ஈடு செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்பது தான். ஓய்வூதியதாரர்கள் பாதிப்பு இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓய்வூதியதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஓய்வூதியதாரர்கள் மருத்துவ செலவுகள் உட்பட பல்வேறு பணத் தேவைகள் ஏற்பட்டிருக்கிறது. இதனை சமாளிக்கக்கூடிய வகையில் அவர்கள் வங்கிகளில் கடனை பெற்று வருகிறார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு பல வங்கிகள் குறைந்த வட்டியில் கடனை அளித்து வந்தாலும் பஞ்சாப் நேஷனல் வங்கி அவர்களுக்கு புதிய கடன் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. ஓய்வூதியதாரர்களுக்கு புதிய கடன் திட்டம் 60 வயதிற்கும் மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு கடன் கொடுத்து வந்தாலும் பஞ்சாப் நேஷனல் வங்கி பிரத்யேகமாக ஓய்வூதியதாரர்களுக்கு என புதிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 70 வயதிற்கு உட்பட்ட சீனியர் சிட்டிசன்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு பெறக்கூடிய பென்ஷன் பணத்திற்கு ஏற்ப கடன் தொகையானது தீர்மானிக்கப்படுகிறது. 70 வயதிற்கு உட்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 25000 முதல் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாயும் கடனை பெறலாம். அதாவது ஓய்வூதியதாரர்களுக்கு தங்களது பென்ஷன் பணத்தில் 18 மடங்கு வரையில் கடனாக பெறலாம். 70 முதல் 75 வயது சீனியர் சிட்டிசன்கள் 70 முதல் 75 வயது வரை இருக்கக்கூடிய ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக 7.5 லட்சம் ரூபாய் வரை கடனை பெறலாம் அல்லது பென்ஷன் பணத்தில் 18 மடங்கு வரை கடனை பெற்றுக் கொள்ளலாம். 75 வயது தாண்டிய சீனியர் சிட்டிசன்கள் 75 வயதை தாண்டி ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் அல்லது பென்ஷன் பணத்தில் 12 மடங்கு கடன் பெற்றுக் கொள்ளலாம். ஓய்வூதியதாரர்கள் தாங்கள் பெற்ற கடனை தொகையை ஐந்து ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். 75 வயதை தாண்டியவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் கடனை தொகையை திருப்பி செலுத்த வேண்டும் மேலும் படிக்க - இந்த பெண்களுக்கு தீபாவளி போனஸ், மாநில அரசு அசத்தல் அறிவிப்பு... யாருக்கெல்லாம் கிடைக்கும்? மேலும் படிக்க - தீபாவளிக்கு முன்பே ரேஷன் கடைகளில் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் -முதல்வர் உறுதி மேலும் படிக்க - விரைவில் ஹாப்பி நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 2024 பரிசு.. டிஏ உயர்வு அறிவிப்பு சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.