TAMIL

ஐஸ்வர்யங்களை அள்ளிக் கொடுக்கும் காமதேனு பசு.. இந்த திசையில் படத்தை மாட்டவே கூடாது

பசுவை புனிதமாக வணங்கும் இந்து மதத்தில் காமதேனு பசுவை பற்றி நீங்கள் நிச்சயம் அறிதிருப்பீர்கள். ஐஸ்வர்யங்களையும், தொழிலில் முன்னேற்றத்தையும் கொடுக்க வல்லது காமதேனு பசு. இதனை தொழில் செய்யும் இடங்கள் மற்றும் பலரது வீடுகளில் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புண்டு. இயல்பாக நீங்கள் எப்போதும் பார்க்கும் பசுவின் தோற்றத்தைப் போல் காமதேனு பசு இருக்கிறது. பெண்ணின் உருத்தையும், மயிலறகையும் கொண்டவாறு இருக்கும் காமதேனு பசுவின் பிறப்பு குறித்து பல புராண கதைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தேவர்கள் பாற்கடலை கடையும்போது காமதேனு பசு பிறந்ததாக சொல்லப்படுகிறது. நான்கு வேதங்களையும் கால்களாக கொண்டிருக்கும் இந்த காமதேசு பசுவை வணங்கினால் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பானதாகும் என புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் படிக்க | Guru Vakra Peyarchi 2024 : ரிஷபத்தில் வக்ரமாகும் குரு! வக்ர இயக்கத்தால் பணமழையில் நனைந்து மகிழும் ராசிகள்! காமதேனு பசுவுக்கு சுரபி என்ற மற்றொரு சிறப்பான பெயரும் இருக்கிறது. காமதேனு பசுவின் கொம்புகளில் முனையில் பிரம்மாவும், மையத்தில் விஷ்ணுவும், அடிவாரத்தில் சிவபெருமானும் உள்ளனர். கண்களில் சூரியனும் சந்திரனும் வசிக்கிறார்கள். அக்னி கடவுள் மற்றும் வாயு, காற்று கடவுள் காமதேனுவின் தோள்களில் இருக்கிறது. வாஸ்து முறைப்படி காமதேனு பசு சிலையை பூஜை அறையில் வைக்க வேண்டும். அதிக செலவுகளை சந்திக்கும் வணிகர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் தென்மேற்கு மூலையில் காமதேனு பசு சிலையை வைத்து வழிபட வேண்டும். காமதேனுவை அதன் கன்றுக்குட்டியான நந்தினியுடன் வழிபடுவது மங்களகரமானது. அப்போது, லட்சுமி, சரஸ்வதி மற்றும் துர்கா ஆகிய மூன்று முக்கிய தெய்வங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். காமதேனு பசு வழிபாடு அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி உங்கள் வீட்டிற்கு அமைதியையும் செழிப்பையும் கொண்டு வர வல்லது. காமதேனு பசு மற்றும் கன்று சிலை உடன் வழிபடுவது, கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களுக்கு நன்மை அளிக்கும். இதை படுக்கையறையிலோ அல்லது குளியலறையிலோ வைக்கக்கூடாது. சிலையை தரையிலோ அல்லது அழுக்கு இடத்திலோ வைப்பதைத் தவிர்க்கவும். பெரும்பாலும் வெள்ளியில் காமதேனு பசு மற்றும் கன்றுக்குட்டியுடன் இருக்கும் சிலையை வாங்கி வைப்பார்கள். அது முடியாதவர்கள் மண் சிலையை வைத்து கூட வழிபடலாம். திங்கட்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் தென்மேற்கு திசையில் வைத்து காமதேனு பசு சிலையை வழிபாடு செய்யக்கூடாது. வணிகர்களாக இருந்தால் மட்டுமே தென்மேற்கு திசையில் அந்த ஒருநாள் மட்டும் வைத்து வழிபட வேண்டும். மற்ற நாட்களில் கிழக்கு, மேற்கு, வடக்கு திசைகளில் பார்த்தவாறு சிலையை வைத்து வழிபடலாம். தவறாமல் காமதேனு பசு வழிபாட்டை மேற்கொள்ளும்போது வீட்டில் செல்வங்கள் கூடிக் கொண்டே செல்லும். கணவன் மனைவி இடையே உறவுச் சிக்கல் எப்போதும் எழாது. வீட்டில் நிலவி வரும் சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து அமைதி மேலோங்கும். ஒட்டுமொத்த மகிழ்ச்சியும் காமதேனு பசு சிலை வழிபாடு மூலம் கிடைக்கும். மேலும் படிக்க | கும்பத்தில் வக்ரகதியை மாற்றும் சனீஸ்வரர்! நாலு ராசிகளுக்கு நல்லது செய்யப்போகும் சனியின் வக்ரநிவர்த்தி சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.