TAMIL

Mozilla பயபடுத்துபவர்களுக்கு தரவு பாதுகாப்பு பிரச்சனை! அரசு சொல்லும் அதிரடி அலர்ட்! சைபர் எச்சரிக்கை...

CERT-In Alerts Mozilla Firefox Users : Mozilla பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய அரசு, மோர்ஜிலா சில தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது. இந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் உங்கள் கணினியை ஹேக் செய்யலாம். எனவே, உங்கள் பயர்பாக்ஸ் உலாவியை உடனடியாக புதுப்பிப்பது நல்லது என அரசு அறிவுறுத்தியுள்ளது. CERT-In எச்சரிக்கை இந்தியாவின் கணினி பாதுகாப்பு நிறுவனமான CERT-In, Mozilla Firefox உலாவியைப் பயன்படுத்தும் இணைய பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. CERT-In, Mozilla Firefox சில தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக அறிவுறுத்தும் அரசு அமைப்பு, இந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் கணினியை ஹேக் செய்து தரவு திருட்டு செய்யமுடியும். எனவே, பயர்பாக்ஸ் உலாவியை விரைவாக புதுப்பிப்பது நல்லது என அந்த அறிவுறுத்தல் கூறுகிறது. CERT-In குறிப்பு மோர்ஜிலாவின் சில தயாரிப்புகளில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. இதில் பயர்பாக்ஸ், பயர்பாக்ஸ் ஈஎஸ்ஆர் மற்றும் தண்டர்பேர்ட் ஆகியவை அடங்கும். இந்தத் தயாரிப்புகளின் பழைய பதிப்பை நீங்கள் பயன்படுத்தினால், அவை உங்கள் தரவு பாதுகாப்புக்கு பாதகமானதாக இருக்கும். மேலும் படிக்க | நவீன தொழில்நுட்பத்தில் புதிய பிரிண்டர்கள்... பிரதர் பிரிண்டரின் தரமான தயாரிப்புகள்! மென்பொருள் பாதிப்பு நீங்கள் Mozilla Firefox, Firefox ESR அல்லது Thunderbird இன் பழைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், கவனமாக இருக்க வேண்டும். இந்த தயாரிப்புகளில் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதால், இந்த குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் உங்கள் கணினியை ஹேக் செய்யலாம். எனவே, உங்கள் தயாரிப்புகளை விரைவாக புதுப்பிக்க வேண்டும். உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டியவை Mozilla Firefox: 131க்கு முந்தைய பதிப்புகள் Mozilla Firefox ESR: 128.3 மற்றும் 115.16க்கு முந்தைய பதிப்புகள் Mozilla Thunderbird: 128.3 மற்றும் 131க்கு முந்தைய பதிப்புகள் சரி, ஒருவர்Firefox அல்லது Thunderbird இன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்களா என்பதை எப்படித் தெரிந்துக் கொள்வது? இந்தப் படிகளைப் பின்பற்றி தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் பயர்பாக்ஸ் அல்லது தண்டர்பேர்ட் உலாவிக்குச் செல்லவும். மேலே நீங்கள் "உதவி" என்ற விருப்பத்தைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்யவும். பின்னர் "பயர்பாக்ஸ் பற்றி" அல்லது "தண்டர்பேர்ட் பற்றி" என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் உலாவியில் சமீபத்திய பதிப்பு இல்லையென்றால், புதுப்பிப்பு விருப்பத்தைக் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் உலாவியைப் புதுப்பிக்கலாம். புதுப்பித்தல் - முடிந்ததும், உங்கள் உலாவி புதுப்பிக்கப்பட்டுவிடும். மேலும் படிக்க | பார்சி மக்களின் உடல் எரிக்கவும் கூடாது, புதைக்கவும் கூடாது... ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது ஏன்? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.