TAMIL

Tamilnadu Trains Cancel Update : கனமழை எதிரொலி, ரயில் சேவை ரத்து குறித்து முக்கிய அறிவிப்பு

Tamilnadu Trains Cancel Update : தமிழ்நாடு முழுவதும் கனமழை பரவலாக பெய்து வருகிறது. வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. லேட்டஸ்ட் தகவல்களின்படி மணிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்கிறது. நாளை காலை சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக இந்த மூன்று மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்புக்காக அரசின் நிவாரண முகாம்களில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் படிக்க | Chennai Rains LIVE Updates: பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மாவட்டங்களில் மட்டும் விடுமுறை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அப்டேட் இதேபோல், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ரயில் சேவை ரத்து இதேபோல் ரயில் சேவை ரத்து குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 16 ஆம் தேதியான இன்று 5 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் - போடி நாயக்கனூர் (20601) எக்ஸ்பிரஸ் ரத்து, சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையேயான ஏலகிரி எக்ஸ்பிரஸ் இருமார்க்கங்களிலும் ரத்து. இதேபோல், சென்னை - திருப்பதி இடையேயான சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை - திருப்பதி இடையேயான பயணிகள் ரயில்சேவையும் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஈரோடு - சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு : கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் அரசின் நிவாரண முகாம்களுக்கு உடனடியாக செல்லும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி பொதுவெளியில் மக்கள் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிக கனமழை பெய்யும் என்பதால் தேவையில்லாமல் பொதுவெளியில் நடமாடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் படிக்க | சென்னை மக்களே உஷார்! எச்சரித்த வானிலை ஆய்வு மையம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.