TAMIL

மேம்படுத்தப்பட்ட JioFinance செயலி! கிடுகிடுவென உயரும் பயனர்களின் எண்ணிக்கை! அப்படியென்ன சிறப்பு?

முகேஷ் அம்பானி JioFinance செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தினார். ரிலையன்ஸின் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் (ஜேஎஃப்எஸ்) சமீபத்தில் அதன் ஜியோ ஃபைனான்ஸ் செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியது. பயனர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கும் இந்த செயலி தற்போது மேம்படுத்தப்பட்ட செயலியாக களம் இறங்குகிறது. முகேஷ் அம்பானியால் அறிமுகப்படுத்தப்பட்ட JioFinance செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் UPI வசதி இருப்பதால், கட்டணங்கள் செலுத்த வசதியாக இருக்கும். நாட்டின் பிரபல தொழிலதிபரும், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி, மற்ற துறைகளைப் போலவே நிதித்துறையிலும் மக்களுக்கு பல வகையான வசதிகளை செய்து வருகிறார். ரிலையன்ஸ் நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் (Jio Financial Services (JFS)) சமீபத்தில் அதன் ஜியோ ஃபைனான்ஸ் செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கும் நோக்கத்தில் இந்த செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் பீட்டா பதிப்பை இந்த ஆண்டு மே 30 அன்று அறிமுகப்படுத்திய நிறுவனத்தின் பயனர் எண்ணிக்கை 6 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. மேலும் படிக்க | இந்தியாவில் ஜியோ ஃபைனான்ஸ் செயலி அறிமுகம்! PhonePe, Paytmக்கு கடும் போட்டி! ஜியோ ஃபைனான்ஸ் செயலியின் அம்சங்கள் JioFinance செயலியை பயன்படுத்தி, நீங்கள் UPI பணம் செலுத்துதல், பில்லுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கும், உங்கள் பணத்தை நிர்வகிக்கவும் உதவியாக இருக்கும். இந்த செயலியின் மூலம், உங்களின் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளையும் ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம். அதுமட்டுமல்ல, நீங்கள் செய்யும் செலவுகளைக் கண்காணிக்கவும் இந்த செயலி உதவியாக இருக்கலாம். JioFinance செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பின் சிறப்பம்சங்கள் இந்த செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பில் பயனர்கள் 24 வகையான டிஜிட்டல் காப்பீட்டுத் திட்டங்களைப் பெறலாம், ஆயுள் காப்ப்பீடு, மருத்துவக் காப்பீடு, இருசக்கர வாகனம் மற்றும் மோட்டார் காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளைப் பெறலாம். கூகுள் பே மற்றும் ஃபோன் ஆப் போன்ற யுபிஐ பேமெண்ட்டுகளைச் செய்வதற்கான வசதியையும் இது வழங்குகிறது. பணம் செலுத்துவது எப்படி? ஜியோ QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்தலாம், மொபைல் எண்ணிலிருந்தும் பணம் செலுத்தலாம், பணத்தை மாற்றலாம். இந்த செயலியின் மூலம் உங்கள் வங்கிக் கணக்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளை இணைக்கலாம், அவற்றை கண்காணிக்கலாம், மற்றும் உங்கள் வருமானம் மற்றும் செலவுகளை பகுப்பாய்வு செய்யலாம். வங்கிக்கணக்கு திறக்கும் வசதி இந்த செயலி பயனர்கள் பில்லுக்கான கட்டணங்களைச் செலுத்த அனுமதிக்கிறது. இதன் மூலம் கிரெடிட் கார்டுக்கான பணம் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் செய்தல், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல வகையான கட்டணங்களையும் செலுத்தலாம். அதன் உதவியுடன் நீங்கள் Jio Payments Bank Ltd. டிஜிட்டல் சேமிப்புக் கணக்கையும் திறக்கலாம். ஜியோ பேமெண்ட்ஸ் பாங்க் லிமிடெட் ஜியோ பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்புத் தேவை இல்லை, ஏனெனில் இது ஜீரோ பேலன்ஸ் கணக்கு ஆகும். இந்த ஜியோ பேமெண்ட்ஸ் பாங்க், பயனர்களுக்கு கடன் வாங்குவதற்கான வசதியையும் வழங்குகிறது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து ஜியோ ஃபைனான்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் படிக்க | டெஸ்லாவின் சைபர்கேப் ரோபோடாக்ஸி எப்போது இந்தியாவுக்கு வரும்? தானியங்கி கார் விலை என்ன? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.