TAMIL

ரயிலில் எத்தனை டன் ஏசி தேவை? டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்!

பயணங்கள் சிலருக்கு விருப்பமானதாக இருக்கும், ஆனால் பொதுவாக பயணம் செய்யாமல் இருக்கவே முடியாது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வசதியான போக்குவரத்து சாதனங்கள் என்றால் பட்டியலில் பல வாகனங்கள் இடம் பெறும். இருந்தாலும், சாமானியர்கள் முதல், செல்வந்தர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணம் மேற்கொள்ளாமல் இருக்க முடியாது. இந்தியாவில் ரயிலில் பயணம் செய்வது மிகவும் வசதியானதாக கருதப்படுகிறது. ரயிலில் பயணம் செய்வது, அதிலும் குறிப்பாக ஏசி கோச்சில் பயணம் செய்வது ஒரு சொகுசு அனுபவம். ஆனால், ரயில் பெட்டியில் பொருத்தப்பட்டிருக்கும் ஏசி எத்தனை டன் எடை கொண்டது என்பதைப் பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? யோசித்திருந்தால் அதற்கான பதில் கிடைத்துவிட்டதா? இல்லையென்றால், முழு விவரங்களையும் தெளிவாகத் தெரிந்துக் கொள்ளுங்கள். இந்தியன் ரயில்வே, பிரத்யேகமான ஏசி வண்டிகளையும் இயக்குகிறது. அதுமட்டுமல்லாமல், எக்ஸ்பிரஸ், அதிவிரைவு ரயில் உட்பட பல ரயில்களில் மூன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, ஏசியில் மூன்று வகை என பலதரப்பட்ட ரயில் பெட்டிகளைக் கொண்ட ரயில்களை இயக்குகிறது. மேலும் படிக்க | இந்தியாவில் ஜியோ ஃபைனான்ஸ் செயலி அறிமுகம்! PhoneaPe, Paytmக்கு கடும் போட்டி! ரயில்களில் ஏசி பெட்டிகளின் வகைகள் இந்திய ரயில்வேயில் முக்கியமாக மூன்று வகையான ஏசி பெட்டிகள் உள்ளன. அதில், முதல் வகுப்பு ஏசி (1ஏசி) மிகவும் வசதியான கோச். பெரிய மற்றும் வசதியான பெர்த்களைக் கொண்டுள்ளது, ஏசியும் நன்றாக வேலை செய்யும். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது இரண்டாம் வகுப்பு ஏசி (2ஏசி) கோச், இது முதல் வகுப்பு ஏசியை விட சற்றே குறைவான வசதி கொண்டது. விலை, முதல் வகுப்பு ஏசியை விட சற்றே குறைவாக இருக்கும். மூன்றாம் வகுப்பு ஏசி கோச் மிகவும் சிக்கனமான ஏசி கோச்சான ஏசி த்ரீ டயர் கோச்களின் எண்ணிக்கை பொதுவாகவே ரயிலில் அதிகமாக இருக்கும். பிற இரு வகை ஏசி கோச்களை விட இதில் விலை குறைவாகவே இருக்கும். ரயிலில் பொருத்தப்பட்டுள்ள ஏசி எத்தனை டன் எடை கொண்டது? ரயிலில் பொருத்தப்பட்டுள்ள ஏசியின் திறன், பெட்டியின் அளவு, பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானிலை போன்ற பல விஷயங்களைப் பொறுத்தது முடிவு செய்யப்படும். எனவே எந்த கோச்சுக்கு எவ்வளவு டன் ஏசி தேவை என்பதை, ரயில் இயங்கும் பாதையில் உள்ள நிலப்பரப்பின் வானிலையும் முடிவு செய்யும். பொதுவாக, ஒரு ரயில் பெட்டியில் 8 முதல் 15 டன் ஏசி இருக்கும். ஆனால் வெவ்வேறு பெட்டிகள் மற்றும் ரயில்களுக்கு இந்த எண்ணிக்கை மாறுபடும். மேலும் படிக்க | டெஸ்லாவின் சைபர்கேப் ரோபோடாக்ஸி எப்போது இந்தியாவுக்கு வரும்? தானியங்கி கார் விலை என்ன? எத்தனை டன் ஏசி தேவை என்பதை முடிவு செய்யும் காரணிகள் ஒரு ரயிலுக்கு எத்தனை டன் ஏசி தேவை என்பதை முடிவு செய்யும் காரணிகள் பல இருந்தாலும் அவற்றில் சிலவற்றைத் தெரிந்துக் கொள்வோம். அளவு ரயில் பெட்டிகள் மிகவும் பெரியவை மற்றும் பல பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இவ்வளவு பெரிய பகுதியை குளிர்விக்க அதிக திறன் கொண்ட ஏசி தேவை. வெப்பநிலை கோடையில் வெளியில் வானிலை மிகவும் சூடாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ரயிலுக்குள் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த அதிக திறன் கொண்ட ஏசி தேவைப்படுகிறது. தொடர்ச்சியான ஓட்டம் ரயில்கள் தொடர்ந்து இயங்கும், இதன் காரணமாக பெட்டியின் உள்ளே வெப்பநிலை அதிகரிக்கும். எனவே, ஏசி தொடர்ந்து வேலை செய்ய வேண்டியுள்ளது என்பதால் நீண்ட தொலைவு பயணிக்கும் ரயில்களுக்கு ஏசி அதிக டன் தேவைப்படும். மேலும் படிக்க | ஜியோவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்! சேவை வழங்க தடைவிதித்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.