ENTERTAINMENT

விஜயின் வாரிசு படத்தை பின்னுக்கு தள்ளிய ஜூனியர் NTRன் படம்... எதில் தெரியுமா?

கொரட்டலா சிவா இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல நட்சத்திரம் ஜூனியர் NTR-ன் அதிரடி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தேவரா’. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ள இந்தப் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர். படத்தில் சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், சாயின் டாம் சக்கோ, ஸ்ரீகாந்த், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் உலகெங்கிலும் வசூல் வேட்டை நடத்திவருகிறது. கொரட்டலா சிவா மற்றும் ஜூனியர் NTR-ன் கூட்டணியில் இது 2-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியான முதல் நாளில் ரூ.154.36 கோடியும், 2-ம் நாளில் ரூ.61.24 கோடியும், 3-ம் நாளில் ரூ.63.51 கோடியும், 4-வது நாளில் ரூ.24.70 கோடி என தற்போதுவரை வசூலித்துள்ளது. மேலும், உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் வெளியான 4 நாட்களில் ரூ.303.81 கோடி வசூலித்தது ‘தேவரா’ திரைப்படம். படத்தின் வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் கூறுகையில், “அடுத்த டார்கெட் ரூ. 400 கோடியாக இருக்கும்” என்றார். அதன்படி பார்த்தல், உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் விஜய்யின் வாரிசு பட வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது ‘தேவரா’. உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் ‘வாரிசு’ படம் வெளியான 6-வது வாரத்தில் மொத்தம் ரூ.297.55 கோடி வசூலித்தது. இதன்மூலம், உலகளவில் ரூ.300 கோடி கிளப்பில் நுழைந்த இரண்டாவது ஜூனியர் என்டிஆர் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது ‘தேவரா’. காம்ஸ்கோர் தரவுகளின்படி, படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எபிக் ஆக்ஷன் படமான ‘The Wild Robot’ படத்தின் வசூலை ஒப்பிடுகையில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது, அதே சமயம் ‘Beetlejuice Beetlejuice’ and ‘Transformers One’ போன்ற படங்களின் வசூலைக் காட்டிலும் ‘தேவரா’ அதிக வசூல் செய்துள்ளது. இதையும் படிங்க: Vettaiyan | இன்று வெளியாகிறது ‘வேட்டையன்’ திரைப்படத்தின் டிரெய்லர்..!! - உற்சாகத்தில் ரசிகர்கள்! உலக நாடுகளில் வெளியான ‘தேவரா’ அதன் முதல் வாரத்தின் இறுதியில் $32.9 மில்லியன் வசூலித்த நிலையில் 2-ம் இடத்திலும், அதே சமயம் ‘The Wild Robot’ படம் $44 மில்லியன் வசூலித்து முன்னிலை வகிக்கிறது. ‘Beetlejuice Beetlejuice’ திரைப்படம் $29 மில்லியன் வசூலித்து 3-ம் இடத்திலும், ‘Transformers One’ திரைப்படம் $29 மில்லியன் வசூலித்து உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் 4-வது இடத்திலும் உள்ளது. உலகளவில் கெத்து காட்டிவரும் ‘தேவரா’ வசூல் தந்து சொந்த மண்ணில் வீழ்ச்சியை கண்டுள்ளது என்று தான் கூற வேண்டும். இந்தியாவில் வெளியான ‘தேவரா’ படம் முதல் வாரத்தில் ரூ.12.5 கோடி வசூலித்தது, அதன் மொத்த இந்திய வசூல் 4-ம் நாள் வரை ரூ.173.1 கோடியாக இருந்தது என்று திரைப்பட வர்த்தக போர்டல் சாக்னில்க் தெரிவித்துள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.