ENTERTAINMENT

லட்டு சர்ச்சை; “வேறு மாதிரியாக புரிந்து கொண்டீர்கள் பவன்“ பிரகாஷ் ராஜ் பதில்..!

திருப்பதி லட்டு விவகாரத்தில் நான் கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது என லட்டு சர்ச்சை தொடர்பாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதில் அளித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் பிரசாதமான லட்டுவில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றி கொழுப்பு கலந்திருப்பதாக வெளியான ஆய்வு முடிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. இந்த விவகாரத்தின்போது ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், ‘‘தேசிய அளவில் சனாதன தர்ம பாதுகாப்பு வரையறை நிறுவுவதற்கான நேரம் வந்துவிட்டது, தேசிய அளவில் இதுகுறித்த விவாதம் தேவை’’ என கூறியிருந்தார். இது குறித்த தனது கருத்தை X தளத்தில் பகிர்ந்த பிரகாஷ் ராஜ், ‘தயவுசெய்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுங்கள், ஏன் அச்சத்தை பரப்பி தேசிய அளவில் பிரச்னையை பெரிதாக்குகிறீர்கள்’ என்று பதிவிட்டிருந்தார். பிரகாஷ் ராஜின் பதிவு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பவன் கல்யாண், ‘இவ்வளவு பிரச்னை நடந்த பின்பும் பேசக்கூடாது என்றால் எப்படி? இந்த விவகாரத்தில் எங்களை மேலும் காயப்படுத்தாதீர்கள், அப்படி பேசினால் சும்மா இருக்கமாட்டேன்’ என எச்சரிக்கும் தோணியில் ஆவேசமாக பேசினார். தனது பதிவை பவன் கல்யாண் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு பவன் கல்யாணின் கேள்விக்கு பதில் கூறியுள்ளார். Dear ⁦ @PawanKalyan ⁩ garu..i saw your press meet.. what i have said and what you have misinterpreted is surprising.. im shooting abroad. Will come back to reply your questions.. meanwhile i would appreciate if you can go through my tweet earlier and understand #justasking pic.twitter.com/zP3Z5EfqDa அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘நான் சொன்னதை வேறு மாதிரியாக புரிந்து கொண்டு நீங்கள் பேசியிருப்பது எனக்கு ஆச்சரியமாகவுள்ளது, ஷூட்டிங் காரணமாக தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன், உங்கள் கேள்விகளுக்கு நான் வந்து பதிலளிக்கிறேன், அதற்குள் நான் போட்ட டீவீட்டை பார்த்து நீங்கள் புரிந்துகொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும்’ என்று பேசியுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.