ENTERTAINMENT

ஆர்த்தி போட்ட பதிவு... குஷ்பு, சைந்தவி கமெண்டில் சொன்ன அந்த வார்த்தை! - என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியுடனான 15 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். ஜெயம் ரவியின் இந்த அறிக்கையையடுத்து, இது முழுக்க முழுக்க அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும், இது தன் ஒப்புதல் இல்லாமல் அவர் வெளியிட்ட ஒன்று என ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தனது பிறந்தநாளன்று விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் ஜெயம் ரவி. மேலும், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மிகவும் மோசமாக நடத்தியதாவும், 15 ஆண்டுகளில் தனக்கென ஒரு வங்கி கணக்கு கூட தன்னால் தொடங்க முடியவில்லை என்று பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். ஜெயம் ரவி ஆர்த்தியை விட்டு செல்வதற்கு கோவா பாடகி கெனிஷாவுடன் அவருக்கு இருக்கும் உறவே காரணம் என்றும் செய்திகள் பரவிய நிலையில், ஜெயம் ரவி, கெனிஷா இருவரும் பகிரங்கமாக அதனை மறுத்தனர். இந்த நிலையில், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி, “உண்மையை மறைக்க, பொதுவெளியில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், என்னையும் தவறாக சித்தரிப்போருக்கு நான் பதில் எதுவும் கூறாமல் அமைதி காப்பது என்னுடைய பலவீனமோ அல்லது குற்ற உணர்ச்சியோ அல்ல, கணவருடன் சேர்ந்து வாழ்வதை தான் விரும்புவதாக அறிக்கையின் மூலம் நேற்று (30.09.24) தெளிவுபடுத்தியிருந்தார். அந்த அறிக்கையை தனது சமூக வலைதள பக்கங்களிலும் அவர் பகிர்ந்திருந்தார். ஆர்த்தி ரவி இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்த அந்த பதிவுக்கு குஷ்பு, சைந்தவி ஆகியோர் கமெண்ட் செய்திருந்தனர். அதில் பாடகியும், ஜிவி பிரகாஷின் முன்னாள் மனைவியான சைந்தவி “தைரியமாக இருங்கள் அக்கா.. உங்களுக்காக என் பிராத்தனைகள்” என்றும் குஷ்பு, “நீ மிகவும் தைரியமானவள்” என்றும் ஆறுதல் கூறும் வகையில் கமெண்ட் செய்திருந்தனர். ஏற்கனவே ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவுக்கு குஷ்பு அவரை மறைமுகமாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / ஆர்த்தி போட்ட பதிவு... குஷ்பு, சைந்தவி கமெண்டில் சொன்ன அந்த வார்த்தை! - என்ன தெரியுமா? ஆர்த்தி போட்ட பதிவு... குஷ்பு, சைந்தவி கமெண்டில் சொன்ன அந்த வார்த்தை! - என்ன தெரியுமா? என் மௌனம் பலவீனம் அல்ல என்று ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தந்து சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவுக்கு சைந்தவி, குஷிபவு மற்றும் பல பிரளங்கள் செய்துள்ள கமெண்ட் என்ன தெரியுமா? படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 1, 2024, 12:51 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vandhana தொடர்புடைய செய்திகள் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியுடனான 15 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். ஜெயம் ரவியின் இந்த அறிக்கையையடுத்து, இது முழுக்க முழுக்க அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்றும், இது தன் ஒப்புதல் இல்லாமல் அவர் வெளியிட்ட ஒன்று என ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தனது பிறந்தநாளன்று விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் ஜெயம் ரவி. விளம்பரம் மேலும், ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மிகவும் மோசமாக நடத்தியதாவும், 15 ஆண்டுகளில் தனக்கென ஒரு வங்கி கணக்கு கூட தன்னால் தொடங்க முடியவில்லை என்று பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். ஜெயம் ரவி ஆர்த்தியை விட்டு செல்வதற்கு கோவா பாடகி கெனிஷாவுடன் அவருக்கு இருக்கும் உறவே காரணம் என்றும் செய்திகள் பரவிய நிலையில், ஜெயம் ரவி, கெனிஷா இருவரும் பகிரங்கமாக அதனை மறுத்தனர். விளம்பரம் இந்த நிலையில், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி, “உண்மையை மறைக்க, பொதுவெளியில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், என்னையும் தவறாக சித்தரிப்போருக்கு நான் பதில் எதுவும் கூறாமல் அமைதி காப்பது என்னுடைய பலவீனமோ அல்லது குற்ற உணர்ச்சியோ அல்ல, கணவருடன் சேர்ந்து வாழ்வதை தான் விரும்புவதாக அறிக்கையின் மூலம் நேற்று (30.09.24) தெளிவுபடுத்தியிருந்தார். அந்த அறிக்கையை தனது சமூக வலைதள பக்கங்களிலும் அவர் பகிர்ந்திருந்தார். விளம்பரம் ஆர்த்தி ரவி இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்த அந்த பதிவுக்கு குஷ்பு, சைந்தவி ஆகியோர் கமெண்ட் செய்திருந்தனர். அதில் பாடகியும், ஜிவி பிரகாஷின் முன்னாள் மனைவியான சைந்தவி “தைரியமாக இருங்கள் அக்கா.. உங்களுக்காக என் பிராத்தனைகள்” என்றும் குஷ்பு, “நீ மிகவும் தைரியமானவள்” என்றும் ஆறுதல் கூறும் வகையில் கமெண்ட் செய்திருந்தனர். ஏற்கனவே ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவுக்கு குஷ்பு அவரை மறைமுகமாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Jayam Ravi , Cinema , Divorce , Entertainment , Khushbu First Published : October 1, 2024, 12:51 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.