ENTERTAINMENT

சிறந்த இசைக்கான விருதை வென்றது கலர்ஸ் தமிழ் தொடரின் பாடல்.. இசையமைப்பாளர் ரிஸ்வான் பெற்றுக்கொண்டார்!

ஜமீலா தொடர் ”ஜமீலா” தொடர் ‘ காலதீரம்’ பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார் இசையமைப்பாளர் ரிஸ்வான். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ”ஜமீலா” தொடரில் இடம் பெற்ற ’காலதீரம்’ பாடலுக்காக இந்த ஆண்டின் சிறந்த தமிழ் இசையமைப்பாளர் விருதினைப் பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ரிஸ்வான். IPRS(Indian Performing Right Society) சார்பில் மும்பையில் நடைபெற்ற #CLEF MUSIC AWARDS - நிகழ்வில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ரிஸ்வான், ஆஸ்கர் நாயகன் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமானிடம் பணிபுரிந்தவர் ஆவார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், ராடன் நிறுவனம் தயாரிப்பில் ஒளிபரப்பான தொடர் ” ஜமீலா”. தென் இந்திய தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் முதன் முறையாக இஸ்லாமிய பின்னணியில் உருவாக்கப்பட்ட தொடர் இது. தன்வி ராவ் இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். தனக்குள் இருக்கும் பாடும் திறமையை குடும்பச்சூழலால் வெளிப்படுத்தாமல் இருக்கும் நாயகி எப்படி உலகம் கொண்டாடும் பாடகியாகிறார் என்ற கருவின் அடிப்படையில் அமைந்தது இந்த தொடர். ”திருமணம் என்னும் நிக்கா” திரைப்பட புகழ் இயக்குநர் அனீஸ்,இயக்குர் ஆஸிப் குரைஷி ஆகியோர் இத்தொடரை இயக்கியிருந்தார்கள். இசைக்கும் பாடலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரில் மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவை அனைத்தையுமே இசையமைப்பாளர் ரிஸ்வான் இசையமைத்திருந்தார். இதற்கான பாடல் வரிகளைப் பாடலாசிரியர் அஸ்மின் எழுதியிருந்தார். மலையாளப் பாடகி ’ஜெர்ரில் சாஜி ’தமிழில் முதன்முதலாக அனைத்தும் பாடலையும் மிகவும் அழகா பாடியிருந்தார். இப்பாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றிருந்தன. இத்தொடரில் பிரபல நடிகர்கள் கெளதம் சுந்தர்ராஜன், பூவிலங்கு மோகன் நண்பர்களாக நடித்திருந்தார்கள் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐஸ்வர்யா பாஸ்கரன் சின்னத்திரைக்கு இந்த தொடர் மூலம் களம் இறங்கினார். கதாநாயகனாக நடித்திருந்த அஜய்-க்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ராதிகா சரத்குமார் மிகவும் விரும்பி தயாரித்த இந்த தொடரில் ரிஸ்வானின் இசையில் இடம்பெற்ற முத்தான மூன்று பாடல்களும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று அனைவரது மனதிலும் இடம் பிடித்திருந்தன. தற்போது காலதீரம் பாடலுக்காக இந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ரிஸ்வானுக்கு கிடைத்துள்ளது. விருது பெற்ற இசையமைப்பாளர் ரிஸ்வானுக்கு ராடன் நிறுவனத்தின் மேலதிகாரி சுபாவெங்கட், கலர்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி பிரிவு தலைமை அதிகாரி ஜெரால்ட், மூத்த மேலாண்மை தயாரிப்பாளர் ஹரி, இயக்குநர்கள் அனீஸ், பாடலாசிரியர் அஸ்மின், இயக்குநர் ஆசிப் குரேஷி ஆகியோர் வாழ்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.