ENTERTAINMENT

மீண்டும் திருமணம்? இன்ஸ்டாவில் வனிதா விஜயகுமார் போட்ட பதிவு

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் தமிழ், குக் வித் கோமாளி, அவ்வப்போது சர்ச்சைகள் கிளப்பும் பேச்சு என தமிழக மக்கள் மத்தியில் அடிக்கடி வைரலாகி வருபவர், இவர் பிரபல சினிமா குடும்பத்தை சேர்ந்தவர், இவர் நடிகர் விஜய்குமாரின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆரம்ப காலகட்டங்களில் சில படங்களில் நடிகையாக நடித்த வனிதா, நடிகர் விஜயுடன் சந்திரலேகா படத்தில் நடித்தார். அதன் பின், நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார், பின்னர் மனக்கசப்பு காரணமாக அந்த திருமணம் விவகாரத்தில் முடிய, 2வதாக ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜன் வனிதா தம்பதிக்கு இரண்டு மகள்கள், அந்த திருமண உறவும் விவகாரத்தில் முடிந்தது, அதன் பின் பிரபல நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டருடன் வனிதா பழக்கத்தில் இருப்பதாகவும், இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்கள் என்றும் கூறப்பட்டது. ராபர்ட் மாஸ்டர் வனிதா திருமணம் குறித்து அப்போது எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை, அதன் பின் பீட்டர் பால் என்பவரை 2022ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அவரையும் வனிதா சில மாதங்களிலேயே விவாகரத்து செய்தார். அந்த திருமணம் மற்றும் விவாகரத்து மிகப்பெரிய பேசுபொருளானது, அதன் பின் பீட்டர் பாலும் உடல்நல குறைவால் காலமானார். இனி யாரையும் நம்பப்போவதில்லை என்றும் மகள்களுடன் தான் இருக்கப்போகிறேன் என்றும் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். அநீதி மற்றும் அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வனிதா நடித்தது குறிப்பிடத்தக்கது, சில படங்களும் அவர் கைவசம் உள்ளது. இந்த நிலையில், சில மணி நேரங்களுக்கு முன் நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்ட்ரோயில் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் கைகளை பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்துடன் கூடிய அழைப்பிதழை பகிர்ந்துள்ளார். Robert ஹார்ட் வனிதா, Save the date Oct 5th 2024 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் வனிதாவுக்கு திருமணமா? ராபர்ட் மாஸ்டருடன் திருமணம் ஆகப்போகும் அழைப்பிதழைதான் அவர் பகிர்ந்துள்ளார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது உண்மையிலேயே திருமண அழைப்பிதழா? அல்லது இருவரும் நடித்து வரும் படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியிடப்பட்ட ஒன்றா என்பது அக்டோபர் 5ம் தேதி தான் உறுதியாகி தெரியும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.