ENTERTAINMENT

பயணத்தின்போது கிடைத்த அந்த அனுபவம்.. பல ஆண்டுகளுக்கு பின் மனம் திறந்த நடிகர் அஜித் - வைரல் வீடியோ!

வீடியோவில் அஜித் பேசும் காட்சி நடிகர் அஜித் குமார் பல ஆண்டுகளுக்கு பின்னர் வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அஜித் குமார் தொடர்ந்து நடித்து வருகிறார். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ள அஜித், தனது ரசிகர்கள் தங்களது குடும்பங்களை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தபோதிலும் அவர்களது நலன் கருதி அஜித் சில ஆண்டுகளுக்கு முன்பாக ரசிகர் மன்றத்தை கலைத்தார். தன்னை தல என்று ரசிகர்கள் அழைக்க கூடாது என்று அஜித் குமார் அன்புக் கட்டளை போட்டிருந்தாலும், ரசிகர்கள் சில அவரை அப்படியே அழைத்து வருகின்றனர். சினிமாவை தாண்டி கார் ரேஸ், ஏரோனாட்டிகல், சமையல், ட்ராவல் என பல சுவாரசியமானவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார் அஜித். சமீபத்தில் இந்தியா முழுவதையும் பைக்கில் சுற்றி வந்த அவர், அடுத்ததாக உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார். ஐரோப்பாவின் சில நாடுகளில் அஜித் பைக்கில் பயணம் செய்திருக்கிறார். சமீப காலமாக ட்ராவலில் அதிக ஆர்வம் காட்டி வரும் அஜித், பல ஆண்டுகளுக்கு பின்னர்தான் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில் அஜித் கூறியிருப்பதாவது- பயணத்தின்போது வெவ்வேறு நாடு, மத, மொழியின மக்களை நான் சந்தித்தேன். அவர்களின் கலாசாரத்தை அனுபவித்ததுடன் அவர்களுடன் நெருங்கி பழகினேன். சாதியும், மதமும் நீங்கள் பார்க்காத நபரின் மீதும் வெறுப்பை ஏற்படுத்தும் என்ற பேச்சு உள்ளது. Being around my man you will start being a better person. His positive energy is infectious. You will empathise for everyone around you. Let’s spread love and make this world a better place to live ❤️❤️ #AK #AjithKumar #Thala pic.twitter.com/aEnNG0CO4e ஆனால், ஒரு பயணம் சாதி மத பேச்சுக்களை தகர்த்து அனைவரிடமும் நெருங்கி பழக உதவுகிறது. மதம், இனத்தை தாண்டி மக்களை நேசிக்க வைக்கக் கூடியது பயணங்கள். பயணங்களே நல்ல பாடங்களை நமக்கு கற்றுக் கொடுக்கின்றன. பயணங்கள் உங்களை இன்னும் சிறந்த மனிதராக மாற்றும் என்று அஜித் தெரிவித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள விடா முயற்சி படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த படத்துடைய டீசர் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி என்ற படத்தில் அஜித் நடிக்கிறார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.