ENTERTAINMENT

BiggBoss Tamil | ஓவராக பேசியவர்களுக்கு குட்டு... முதல் நாளில் விஜய் சேதுபதி செய்த தக்லைஃப் சம்பவங்கள்

பிக் பாஸ் தமிழின் 8வது சீசன் தொடங்கியுள்ளது. பிக்பாஸ் தமிழின் முதல் 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அதிலிருந்து விலகிய நிலையில் விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில் போட்டியாளர்களும் களமிறங்கியுள்ளனர். பெரும்பாலான போட்டியாளர்கள் சின்னத்திரையிலிருந்தே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நடிகர் ரஞ்சித், குக் வித் கோமாளியில் இடம்பெற்ற தர்ஷா குப்தா, சுனிதா, விஜேக்களான ஜாக்குலின், தீபக், விஷால் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல, சின்னத்திரை நட்சத்திரங்களான பவித்ரா ஜனனி, அருண் பிரசாந்த், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் உள்ளிட்டோரும் களமிறங்கியுள்ளனர். விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தில் நடித்திருந்த சச்சனா நமிதாஸும் இதில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். போட்டியாளர்களை அறிமுகம் செய்துவைத்தபோதே தன்னுடைய பாணியில் தக்லைஃப் சம்பவங்களை செய்யும்விதமாக விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பேசியது கவனம் ஈர்த்தது. முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தரை அறிமுகம் செய்துவைத்த விஜய் சேதுபதி, “பிக் பாஸ் நிகழ்ச்சியை வச்சு நிறைய பேரு சம்பாதிக்கிறீங்க. நீங்க ரிவ்யூ செய்து எவ்வளவு பணம் சம்பாதிச்சு இருக்கீங்க” எனக் கேட்டார். சற்று நிமிடம் அதற்கு பதில் சொல்ல முடியாமல் நின்ற ரவீந்தர், ‘‘நான் ரிவ்யூ செய்தால் நன்றாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். நான் ஆதாயத்திற்காக ரிவ்யூ செய்யவில்லை. யாரையும் தரம் தாழ்த்தி ரிவ்யூ செய்யவில்லை" என்று பேசிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்த விஜய் சேதுபதி, “நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதிலை சொல்லாமல் சுற்ற விட்டு பதில் சொல்றீங்க” என்று கூறி மடக்கினார். அதற்கு ரவீந்தர் சிரித்து சமாளித்தார். இதேபோல், தர்ஷா குப்தாவை அறிமுகம் செய்துவைத்த விஜய் சேதுபதி அவரிடம், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களை ஒருத்தங்க தொந்தரவு செய்றாங்க கஷ்டப்படுத்துறாங்க என்றால் நீங்கள் அவர்களிடம் எப்படி இருப்பீங்க" என்று விஜய் சேதுபதி கேட்டார். அதற்கு தர்ஷா, “நான் அவர்களை டென்ஷன் ஆகுற மாதிரி சிரித்தப்படியே கலாய்த்து விடுவேன்” என்று கூறினார். “அவர்கள் அப்போதும் டென்ஷனாகாமல் இருந்தால் என்ன செய்வீங்க” என்று விஜய் சேதுபதி விடாமல் மீண்டும் கேட்க, “நான் அவர்கள் டென்ஷன் ஆகிற வரைக்கும் விடமாட்டேன் கலாய்த்துக்கொண்டே இருப்பேன்” என்று தர்ஷா சொல்ல, “நான் உங்களை கோபப்படுத்தற மாதிரி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டு விஜய் சேதுபதி மடக்கினார். இந்த கேள்விக்கு தர்ஷா பதில் எதுவும் சொல்ல முடியாமல் சிரித்து மழுப்பினார். பின்னர் நடிகர் அர்னாவ்வை அறிமுகம் செய்துவைத்த விஜய் சேதுபதி, அவரிடம் “பிக் பாஸ் வீட்டிற்குள் உங்களுடைய விளையாட்டை எப்படி விளையாடப் போகிறீர்கள்” என்று கேட்டார். இதற்கு, “நான் எதற்கும் துணிந்து தான் வந்திருக்கிறேன். என்ன நடந்தாலும், பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஒரு ஆம்பளையா இருந்துட்டு எதிலும் தோல்வி அடைஞ்சா அசிங்கமாயிடும்” என்று விவகாரமாக பேசினார். இதனை கண்டிக்கும் விதமாக பேசிய விஜய் சேதுபதி, “என்ன சார் பேசுறீங்க? தைரியத்துல ஏது ஆம்பள, பொம்பளனு பேசுறீங்க” என்று கேட்டார். பின்னர் அர்னாவ்வை அனுப்பிவைக்கும்போது, “உங்களுக்கு எதிரி உங்க வாய்தான். உங்க வாயால்தான் உங்களுக்கு பிரச்சனை வரப்போகிறது” என்று வார்னிங் கொடுத்து விஜய் சேதுபதி அனுப்பி வைத்தார். நடிகர் ரஞ்சித்தை அறிமுகம் செய்துவைத்தபோது, “சின்ன வயதில் உங்களின் சிந்துநதிப் பூவே திரைப்படத்தை பார்த்துள்ளேன். அந்த படத்தில் அழகான நண்பர் கேரக்டரில் நடித்து இருந்தீர்கள். சமீபத்தில் நீங்கள் இயக்கிய கவுண்டபாளையம் திரைப்படம் வந்தபோது நீங்கள் பேசியது வேறு விதமாக இருந்தது. ரஞ்சித் என்பவர் உண்மை முகம் என்ன? நான் பார்த்த சிந்துநதி பூவே படத்தில் வரும் கேரக்டரா? அல்லது சமீபத்தில் பேசிக் கொண்டிருக்கும் ரஞ்சித்தின் முகமா. இதில் எது உண்மை?” என கேள்வி எழுப்பினார் ரஞ்சித். அதற்கு, சிந்து நதி பூவே திரைப்படத்திலிருந்த கேரக்டர் தான் என்னுடைய நிஜ கேரக்டர். நான் இயக்கும் திரைப்படங்களில் என்னுடைய கேரக்டர் இருப்பது உண்மைதான். ஆனால் நான் எப்போதும் சரியான நியாயமான விஷயங்களை தான் பேசிக் கொண்டிருக்கிறேன்" என ரஞ்சித் கூற, அதற்கு பதிலடியாக, “பிக்பாஸ் வீட்டிற்குள் நீங்கள் இன்னும் நிறைய விஷயத்தை பார்க்கப் போறீங்க. அது உங்களை இன்னும் மாற்றப் போகுது” என்று கூறி அனுப்பி வைத்தார். அப்போது உங்களுடன் யார் வந்திருக்கிறார்கள் எனக் கேட்க, சில நண்பர்களை ரஞ்சித் அறிமுகம் செய்துவைப்பார். அந்த நண்பர்களில் ஒருவர், “சாப்டீங்களா.. எங்க ஊரில் எப்போதும் முதலில் இப்படிதான் கேட்போம்” என்று கூற, அதற்கு பதிலடியாக, “எங்க ஊரிலும் அப்படிதான் கேட்போம். எல்லா ஊரிலும் அப்படித்தான் கேட்பார்கள். இது வழக்கம்தான். வீட்டுக்கு வந்தவர்களை எந்த ஊரிலும் வெளியே போ என்று சொல்ல மாட்டார்கள்” என்று பதில் கொடுத்தார் விஜய் சேதுபதி. #VijaySethupathi கிட்ட கவனமா பேசனும்பே. 🔥🔥 ஆண்டவரா இருந்துருந்தா அதுதான் கோவையின் பெருமைனு பேசி ஓட்டு கேட்டுட்டு இருந்துருப்பாரு. #BiggBossTamil | #BiggBossTamil8 | #BBTamil | #BBTamil8 | #BiggBoss8Tamil | #BB8Tamil | #MakkalSelvan | #BiggBossTamilSeason8 | #VijaySethupathi pic.twitter.com/KXRtvkimTX இப்படியாக தக்லைஃப் சம்பவங்கள் மட்டுமில்லாமல், கனிவோடும் போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி பேசிய நிகழ்வுகளும் அமைந்தது. நடிகர் தீபக்கிடம், “நீங்கள் எனக்கு இன்ஸ்பிரேஷன்” என்றும், நடிகை சுனிதாவை கட்டியணைத்தும், மகாராஜா படத்தில் மகளாக நடித்த சஞ்சனாவிடம் நெகிழ்வாக பேசியும் விஜய் சேதுபதி கவனிக்க வைத்தார். கமல் விலகிய பிறகு எட்டாவது சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளர் என்றதும் அவர் நிகழ்ச்சியை எப்படி கொண்டு போகப்போகிறாரோ என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு விஜய் சேதுபதியின் வெரைட்டி பேச்சுக்கள் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. போட்டியாளர்களை அதிகமாக பேசவிடாமல், தொகுப்பாளர் என்ற முறையில் போட்டியாளர்களை பேச வேண்டிய விஷயங்களை பேசவைத்து தவறாக பேசும்போது அவர்களுக்கு தக்க இடத்தில் அறிவுரைகளை கூறியும், ஒரு சிலரை கலாய்த்தும் விஜய் சேதுபதி அனுப்பி வைத்தது கவனம் ஈர்த்தது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.