INTERNATIONAL

Hezbollah | ஹெஸ்புல்லா அமைப்பு உருவானது ஏன்? வலுவான இராணுவ சக்தியாக மாறியது எப்படி?

ஹிஸ்புல்லா அமைப்பு எப்போதெல்லாம் காஸாவின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை வழக்க​மாகக் கொண்டுள்ளது ஹிஸ்புல்லா. யார் இந்த ஹிஸ்புல்லா? என்பதை விரிவாக பார்க்கலாம். ஈரானுக்கு எப்போதும் ஆதரவுக்கரம் நீட்டி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. லெபனானை தலைமையிடமாகக் கொண்டு இது இயங்குகிறது. லெபனானின் அரசியல் அதிகாரத்​தி​லும், நாடாளு​மன்றத்திலும் அங்கம் வகிக்கிறது. ஹமாஸின் கூட்டாளியாக, போராளிக் குழுவாகவும் ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது. 1982 ஆண்டு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் லெபனானை ஆக்கிரமித்தன. இதனை எதிர்த்துக்கும் வகையில் ஷியா முஸ்லீம்கள் குழு இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது. அரபு நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக ஈரானும் அதன் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையும், அப்பொழுது வளர்ந்து வந்த போராளிகளுக்கு நிதி மற்றும் பயிற்சி அளித்தன. அந்த குழுதான் “கடவுளின் கட்சி” என்று பொருள்படும் ’ஹிஸ்புல்லா’வாக உருவெடுத்தது. பின்னர், இஸ்ரேலுக்கு எதிராகச் சக்தி வாய்ந்த அமைப்பாக வளர்ச்சியடைந்த ஹிஸ்புல்லாவுக்கு ஈரானின் முழு ஆதரவும் கிடைத்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாணியில் அன்று முதல், பொருளா​தா​ர ரீ​தி​யாக​வும், ஆயுதங்கள் வழங்கு​வ​திலும் ஹிஸ்புல்​லா​வுக்கு ஈரான் உதவி வருகிறது. இதனால் தனது படை பலத்தையும் ஆயுத பலத்தையும் மேம்படுத்திக் கொண்ட ஹிஸ்புல்​லா, தெற்கு லெபனான் உட்பட நாட்டின் சில பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை செயல்படுத்தி வருகிறது. 2013 ஆம் ஆண்டு சிரியா உள்நாட்டுப் போரில் ஈடுபடுவதாக ஹிஸ்புல்லா அமைப்பு பகிரங்கமாக அறிவித்தது. சன்னி கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக சிரியா அரசாங்கத்தை ஆதரிப்பதில், ஈரானிய மற்றும் ரஷ்ய படைகளுக்கு உதவ போராளிகளை அனுப்பியது. அப்போது, அசாத் ஆட்சியின் இராணுவ வெற்றிக்கு ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா அமைப்பு ஒரு வலுவான ராணுவ சக்தியாக மாறியது. சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வைத்திருக்கும் ஹிஸ்புல்லா, 2006 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு எதிராக போரை நடத்தியது. பெரும்பாலானா நாடுகள் வைத்திருக்கும் அதிநவீன பீரங்கிகளின் ஹிஸ்புல்லாவிடம் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. உலகின் திறன்​மிக்க ஏவுகணை​களைக் கொண்டிருப்​பதால் உலக நாடுகளில் அரசை சார்ந்​திராத பெரிய ஆயுதக்குழு அமைப்பாக ஹிஸ்புல்லா அறியப்​படு​கிறது. 1983 இல் அமெரிக்கத் தூதரக தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பொறுப்பேற்றுக் கொண்டது. 1994 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் யூத சமூக மையத்தின் மீது கார் குண்டுவெடிப்பு, லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் மீது குண்டுவெடிப்பு என ஹிஸ்புல்லா அமைப்பு வெளிநாடுகளில் உள்ள யூதர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால், இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஹிஸ்புல்​லாவை ஒரு பயங்கரவாத அமைப்பாகவே பார்க்​கின்றன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.