INTERNATIONAL

Birth Rate: பூமியில் இருந்து விரைவில் காணாமல் போகும் முதல் நாடாக மாறும் தென் கொரியா? இதுதான் காரணமா?

பூமியில் இருந்து விரைவில் காணாமல் போகும் முதல் நாடாக தென் கொரியா மாறுமா?. அதற்கான காரணமாக சொல்லப்படுவது என்ன தெரியுமா?. ஒரு காலத்தில் அதன் விரைவான நவீனமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக கொண்டாடப்பட்ட தென் கொரியா, தற்போது கடுமையான மக்கள் நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாட்டின் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் அதன் மக்கள் தொகை மூன்றில் இரண்டு பங்காக சுருங்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை கருத்தில் கொள்ளாமல் விட்டால், இது பொருளாதாரத்தை சீர்குலைத்து, தென் கொரியாவின் சமூகத்தை மறுவடிவமைக்கும் என்று சொல்லப்படுகிறது. 1960-களில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாடு கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அப்போதுதான் இந்த பிரச்சனையும் தொடங்கியது. அந்த நேரத்தில், தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு ஆறு குழந்தைகளாக இருந்தது. அதே நேரத்தில் அதன் தனிநபர் வருமானம் உலக சராசரியில் 20% மட்டுமே. இந்த நிலையில், தென் கொரியாவில் இன்று கருவுறுதல் விகிதம் உலகளவில் மிகக் குறைந்த அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது. Also Read: 20 ஆண்டுகளாக நாள்பட்ட தும்மலால் அவதிப்பட்ட இளைஞர்.. சோதனை முடிவில் வந்த தகவலால் மருத்துவர்கள் அதிர்ச்சி! தென் கொரியாவின் மக்கள் தொகை தற்போது 52 மில்லியனாக இருக்கிறது தற்போதைய நிலையே தொடர்ந்தால் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் தொகை 17 மில்லியனாக அல்லது 14 மில்லியனாக சுருங்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தென் கொரிய அரசாங்கம் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வரிச் சலுகைகள், மானியத்துடன் கூடிய குழந்தைப் பராமரிப்பு மற்றும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்களுக்கான ராணுவ சேவை விலக்குகள் ஆகியவையும் அடங்கும். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் இன்னும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பல தென் கொரிய பெண்கள், குறிப்பாக நகர்ப்புறங்களில், குடும்பங்களை தொடங்குவதை விட தொழிலைத் தேர்வு செய்கிறார்கள். 2024ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது. 93% பேர் வீட்டு வேலை மற்றும் குழந்தை பராமரிப்பு சுமைகளை காரணமாக கூறியுள்ளனர். பல தென் கொரிய ஆண்கள் வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். தென் கொரியாவின் பிறப்பு விகிதம் குறைவது வெறும் மக்கள் தொகை பிரச்சனை மட்டுமல்ல. பாலின சமத்துவமின்மை மற்றும் மாறிவரும் குடும்ப இயக்கவியல் உள்ளிட்ட ஆழமான சமூக சவால்களின் பிரதிபலிப்பாகும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.