INTERNATIONAL

Exclusive | இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு இதுதான் உண்மை காரணம்... பின்னணியை விளக்கும் பத்திரிகையாளர் மணிவண்ணன்!

இஸ்ரேல் - ஈரான் போர் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் ராணுவத் தளபதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டதை அரசியல் ரீதியான அவமானம் எனக் கருதியதால், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடுத்துள்ளதாக பிபிசி தமிழ் முன்னாள் ஆசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலின் பின்னணி குறித்து, லண்டனில் இருந்து நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் கார்த்திகைச்செல்வனிடம் அவர் பகிர்ந்துகொண்ட தகவலை பார்க்கலாம். அவர் கூறியதாவது, நாடு சிறியதாக இருந்தாலும், ராணுவ ரீதியாக இஸ்ரேல் பலம் வாய்ந்தது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மற்றும் ராணுவத் தளபதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டதை அரசியல் ரீதியான அவமானம் எனக் கருதியதால், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடுத்துள்ளது என்றார். மேலும், இஸ்ரேல் அணு ஆயுதம்(Nuclear weapon) வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதை இஸ்ரேல் ஒருபோதும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதில்லை, அறிவித்ததும் இல்லை. இதற்கிடையே இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்கிறது என்பது பல அணு ஆயுத பார்வையாளர்களின் மத்தியில் நிலவும் கருத்து என்று பிபிசி தமிழ் முன்னாள் ஆசிரியர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவால் போரை நிறுத்த வாய்ப்பு இல்லை என்றும், இஸ்ரேல் மீது வலுவான செல்வாக்கை செலுத்தி போரை நிறுத்துவதற்கான மனோதிடம் அமெரிக்காவிற்கு இல்லை என்றார். போரை நிறுத்துவதற்கான ஐ.நா.வுக்கு ராஜ்ய செல்வாக்கு இருப்பதாக தெரியவில்லை எனக்கூறிய அவர், ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்தால் அமெரிக்கா எதிராக வாக்களிக்கும். மேலும், ரஷ்யாவின் கவனம் எல்லாம் உக்ரைனில் இருக்கிறது என்று பிபிசி தமிழ் முன்னாள் ஆசிரியர் மணிவண்ணன் தெரிவித்து உள்ளார். ஈரான் ராணுவம் வெளியிட்ட விளக்கம் முன்னதாக இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து ஈரான் ராணுவம் அறிக்கை வெளியிட்டது. அதில், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகர் அருகே உள்ள மூன்று ராணுவ தளங்களை குறி வைத்து தாக்கியதாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் ஹசன் நசருல்லா, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலஸ்தீன், லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் உக்கிரமாக தாக்குவோம் எனவும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. இதனிடையே, இஸ்ரேலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்கப்பட்டிருப்பதாக ஈரான் அதிபர் மசூத் தெரிவித்துள்ளார். நியாயமான உரிமைகளுக்காகவும், ஈரானில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்காகவும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு பதில் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.