INTERNATIONAL

“உலகம் நெருக்கடியில் இருந்தால் இந்தியாதான் முதலில் உதவிக்கு வரும்” - மோடி பெருமிதம்

அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பு உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் பிரதமர் மோடி, அந்நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடனான வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, IBM நிறுவன சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா, ADOBE நிறுவன தலைவர் சாந்தனு நாராயண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, திறமை, ஜனநாயகம் மற்றும் சந்தைப்படுத்துதலை அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் என்ற தாரக மந்திரத்தை கொண்டு இந்தியா முன்னோக்கி நகர்ந்து வருவதாகவும் பிரதமர் கூறினார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் இணைந்து செயல்படுவதற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, உலகளவில் செமிகண்டக்டர் உற்பத்தியில் 20 சதவிகிதம் பங்களிப்பை இந்தியா வழங்கி வருவதாகத் தெரிவித்தார். இந்தத் துறையில் அடுத்த ஓரிரு ஆண்டில் 85 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்களை உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து பேசிய சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் இந்தியாவை எப்படி மாற்ற முடியும் என்று பிரதமர் மோடி சிந்தித்து வருவதாகவும், சுகாதாரம், கல்வி, வேளாண் துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்து கூகுள் நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்ய உள்ளதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார். அதேபோல், அமெரிக்காவின் லாங் ஐலேண்டில் நடைபெற்ற ‘மோடியும் அமெரிக்காவும்’ நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளி மக்களிடையே பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “ஏஐ என்றால் உலகம் செயற்கை நுண்ணறிவு என்று சொல்கிறது. ஆனால் என்னைப் பொருத்தவரையில் ஏஐ என்றால் அமெரிக்க - இந்தியர்களின் வலிமையைக் குறிப்பது. ஏஐ தொழில்நுட்பமானது புதிய உலகின் சக்தியாக உருவெடுத்துள்ளது. இதையும் படியுங்கள் : லெபனான் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. 274 பேர் பலி… 1000 பேர் காயம் இந்தியா-அமெரிக்கா உறவுகளுக்கு இந்தப் புதிய தொழில்நுட்பம் புதிய இலக்குகளை எட்டும். இந்தியா யார் மீதும் தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பவில்லை; ஆனால் உலகின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க விரும்புகிறது. உலக அமைதியை விரைவுபடுத்துவதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது, அனைவருடனும் சமமான தூரத்தை பேணுவது அல்ல; மாறாக அனைவருடன் சமமான நெருக்கத்தைக் கடைப்பிடிப்பதாகும். இது போருக்கான நேரம் அல்ல; போரின் தீவிரத்தை அனைத்து நண்பர்களும் புரிந்துகொண்டுள்ளனர். உலகில் எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்தியாவே முதலில் உதவ முன்வந்துள்ளது. நிலநடுக்கம், உள்நாட்டுப் போர், கொரோனா காலங்களில் இந்தியாவின் உதவி முதலில் அங்கு சென்றடைகிறது” என்றார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.