TECHNOLOGY

Infinix Zero 40 | அசத்தல் அம்சங்களுடன் புதிய 5ஜி மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய இன்ஃபினிக்ஸ் நிறுவனம்! - விலை எவ்வளவு தெரியுமா?

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் புதிதாக Infinix Zero 40 5G என்ற மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மொபைல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. Infinix AI-ஐ இன்டகிரேட் செய்யும் நிறுவனத்தின் முதல் மொபைல் இதுவாகும். இந்த டிவைஸ் மீடியாடெக் டைமென்சிட்டி சிப்செட்டை கொண்டுள்ளது. மேலும் இதன் பின்புறம் மூன்று ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது மற்றும் GoPro மோடை கொண்டுள்ளது. Infinix Zero 40 5G மொபைலின் விலை விவரங்கள்: புதிய Infinix Zero 40 5ஜி மொபைல் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் என மொத்தம் 2 வேரியன்ட்ஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் விலைகள் முறையே ரூ.27,999 மற்றும் ரூ.30,000 ஆகும். செப்டம்பர் 21 முதல் நாட்டில் விற்பனைக்கு வந்துள்ள இந்த மொபைல் ராக் பிளாக், மூவிங் டைட்டானியம் மற்றும் வயலட் கார்டன் ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. Infinix Zero 40 5G மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள்: Infinix நிறுவனத்தின் இந்த புதிய மொபைல் 6.78-இன்ச் ஃபுல் -HD+ (1,080 x 2,436 பிக்சல்கள்) கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரெஃப்ரஷ் ரேட் , 1,300nits பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொட்டக்ஷன் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் MediaTek Dimensity 8200 Ultimate ப்ராசஸரை கொண்டுள்ளது. 12GB LPDDR5X வரையிலான ரேம் மற்றும் 512GB வரையிலான UFS 3.1 ஆன்போர்டு ஸ்டோரேஜை இந்த மொபைல் கொண்டுள்ளது. Android 14 அடிப்படையிலான XOS 14.5-ல் இயங்கும் இந்த மொபைலானது டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிக்கான IP54 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. இந்த மொபைலின் மொத்த எடை 195g ஆகும். இந்த மொபைலில் ட்வின் ஹை-ரெஸ் டிடிஎஸ் ஸ்பீக்கர்ஸ் மற்றும் கூடுதல் பாதுகாப்பிற்காக இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்-பிரிண்ட் சென்சார் உள்ளது. இதையும் படிக்க: புதிய மொபைல் வாங்க பிளானா.. இந்த மாதம் விற்பனைக்கும் ஹைடெக் மாடல்கள் இந்த மொபைல் டிரிபிள் பேக் கேமரா சிஸ்டமுடன் வருகிறது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிளைசேஷனுடன் (OIS) கூடிய 108MP பிரைமரி சென்சார் , 50MP அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 2MP டெப்த் சென்சார் உள்ளிட்டவை அடங்கும். முன்பக்கம் 50MP செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டுமே, விநாடிக்கு 60 பிரேம்களில் 4K வீடியோவை பதிவு செய்யும் திறன் கொண்டவை. யூஸர்கள் GoPro கேமராக்களை Infinix Zero 40 5G உடன் அதன் பில்ட்-இன் GoPro மோட்-உடன் கனெக்ட் செய்ய முடியும். மேலும் pair செய்யப்பட்ட GoPro ஆப்ஸை யூஸர்கள் தங்கள் மொபைலில் இருந்தே நேரடியாக கட்டுப்படுத்தலாம். இதையும் படிக்க: செல்போனில் சத்தம் சரியா கேக்கலையா? - இதை செஞ்சு பாருங்க… 2 மடங்கு சவுண்ட் கூடும்! AI Eraser, AI கட்அவுட் மற்றும் பிற AI-backed செயல்பாடுகளுடன் கூடிய Infinix AI அம்சங்களுடன் இந்த மொபைல் வருகிறது. இந்த புதிய மொபைல் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கிறது மற்றும் 45W வயர்டு மற்றும் 20W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைல் 5G, 4G, Wi-Fi 6E, NFC, GPS, Bluetooth மற்றும் USB Type-C உள்ளிட்ட அம்சங்களை சப்போர்ட் செய்கிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.