TECHNOLOGY

நம்பமுடியாத பிரீபெய்டு ஆஃபர் வெளியிட்ட Jio... வாடிக்கையாளர்கள் குஷி

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் புதிதாக இரண்டு பிரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கான செலவு மற்றும் அதன் மூலமாக கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றைப் பற்றி பார்க்கலாம். இந்தியாவில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ என்பது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்து வருகிறது. பல இந்தியர்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதற்கு இந்த நிறுவனத்திற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பிசினஸ் இந்தியா முழுவதும் தனது நெட்வொர்க்கை வழங்குவதன் மூலமாக நாடு முழுவதும் அனைவருக்கும் இன்டர்நெட் கிடைப்பதை உறுதி செய்கிறது. வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் அவ்வப்போது ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு விதமான ஆஃபர்களை வழங்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஜியோ 1028 ரூபாய் மற்றும் 1029 ரூபாய் மதிப்புள்ள இரண்டு புதிய பிரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. 1028 ரூபாய் செலவில் கிடைக்கும் சப்ஸ்கிரிப்ஷன் ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை 84 நாட்கள் வேலிடியுடன் வழங்குகிறது. கூடுதலாக கஸ்டமர்கள் தினமும் 2GB டேட்டாவையும் பெறுவார்கள். இதன் மூலம் மொத்தமாக 168GB டேட்டா பயன்படுத்துவதற்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி 5G ஆக்சஸ் கிடைக்கும் பகுதிகளில் உள்ள யூசர்கள் 5G டேட்டாவை எந்த ஒரு தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம். இதையும் படிக்க: UPI-ல் இனி இவ்வளவு ரூபாய் வரை ட்ரான்சாக்ஷன் பண்ணலாம்… அதிகபட்ச லிமிட்டை அதிகரித்த RBI..! இதே மாதிரியான அடிப்படை அம்சங்கள் 1029 ரூபாய்க்கான பேக்கேஜிலும் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 100 SMS, 2GB டேட்டா 84 நாட்களுக்கு கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் 5G டேட்டா பயன்படுத்தலாம். 1028 ரூபாய் ஜியோ திட்டம் 84 நாட்கள் சேவை. மொத்த வேலிடிட்டி காலத்தில் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் இலவசமாக போன் செய்யலாம். ஒரு நாளைக்கு 2GB 4G டேட்டா மொத்தமாக 84 நாட்களுக்கு 168GB டேட்டா. ஜியோ 5G நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் யூசர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 100 SMS ஸ்விக்கி ஒன் லைட் அப்ளிகேஷனுக்கான இலவச மெம்பர்ஷிப் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்றவற்றிற்கான அணுகல் கிடைக்கும். இதையும் படிக்க: இந்த பிரவுசர் யூசர்களா நீங்கள்..? மத்திய அரசு எச்சரிக்கை 1029 ரூபாய் ஜியோ திட்டம் 1028 ரூபாய் திட்டம் போலவே 84 நாட்களுக்கான சேவை. இலவச போன் கால் மற்றும் ஒரு நாளைக்கு 2GB 4G டேட்டா, 5G நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் அன்லிமிடெட் 5G டேட்டா. 3 மாதங்களுக்கு இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் சேவைகளுக்கான இலவச அணுகல். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.