TECHNOLOGY

Google லென்ஸில் இனி AI.. புதிய அப்டேட்டை தரமாக இறக்கிய கூகுள்

Google AI முன்னதாக கூகுள் லென்ஸில் ஒரு பொருளின் புகைப்படத்தை பயன்படுத்தி அது சம்பந்தப்பட்ட கேள்வியை டைப் செய்வதன் மூலமாக கேள்விக்கான பதிலை பெறலாம். ஆனால் இனி ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பயன்படுத்தி வாய்ஸ் மூலமாகவே உங்களுடைய கேள்விகளை நீங்கள் பதிவு செய்யலாம். கூகுளின் இந்த புதிய அம்சம் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம். கூகுள் அதன் லென்ஸ் அம்சத்தில் AI கொண்டு தேடும் புதிய அம்சத்தை வெளியிட்டு உள்ளது. இனிமேலும் நீங்கள் எதையும் தேடுவதற்கு டைப் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக இந்த புதிய அப்டேட் மூலமாக ஒரு குறிப்பிட்ட பொருள் மீது கேமராவை காட்டி வாய்ஸ் மூலமாக கூகுளின் AI மாடலிடம் அது குறித்த கேள்விகளை யூசர்கள் கேட்பதற்கு கூகுள் லென்ஸ் அனுமதிக்கிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு மீன்வளப் பூங்காவிற்கு செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அங்கு வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான மீன் வகைகள் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கும். இதற்கு நீங்கள் உங்களுடைய கூகுள் அப்ளிகேஷனில் உள்ள லென்சை திறந்து ஷட்டர் பட்டனை அழுத்தி, “இந்த மீன்கள் ஏன் ஒன்றாக நீந்தி செல்கின்றன?” என்று கூகுளிடம் கேட்கலாம். இவ்வாறு கூகுள் வியாழக்கிழமை அன்று வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருந்தது. கூகுள் லென்ஸ் AI வீடியோ ரெகக்னிஷன் அம்சமானது இந்த வருடத்தின் துவக்கத்தில் நடந்த ஒரு நிகழ்வில் டீசராக வெளியிடப்பட்டது. தற்போது இந்த அம்சம் ஆங்கிலத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டிலும் வெளியிடப்படுகிறது. எனினும் கூகுள் லென்ஸ் வாய்ஸ் மூலமாக ஆக்டிவேட் செய்யப்படும் இந்த தேடல் அம்சமானது உலக அளவில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் யூசர்களுக்கு ஆங்கிலத்தில் பயன்படுத்துவதற்கு மட்டுமே கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஷாப்பிங் செல்பவர்கள் ஒரு குறிப்பிட்ட பொருளின் விலையை பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் ஒரு அம்சத்தை கூகுள் நிறுவனம் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Also read | மீட்டிங்கில் இனி நோட்ஸ் எடுக்க வேண்டாம் - கூகுள் மீட்டின் அட்டகாச அப்டேட்கள்! கூகுள் லென்ஸ் என்றால் என்ன? ஏழு வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கூகுள் லென்ஸ் அம்சம் மூலமாக யூசர்கள் ஒரு படத்தில் உள்ள பொருள் சம்பந்தப்பட்ட கேள்விகளை சமர்ப்பிப்பதற்கு அனுமதிக்கிறது. உதாரணமாக ஒரு சைன் போர்ட் அல்லது வேறு ஒரு மொழியில் உள்ள டாக்குமெண்டை மொழிபெயர்க்க சொல்லி நீங்கள் கேட்கலாம். ஒவ்வொரு மாதமும் கூகுள் லென்ஸ் மூலமாக 20 பில்லியன் தேடல்கள் நடைபெறுவதாக நிறுவனம் கூறியுள்ளது. அதிலும் இந்த லென்ஸ் அம்சத்தை 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட யூசர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.