TECHNOLOGY

60 நிமிட வீடியோக்கள் இனி 3 நிமிடம் தான்.. புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் யூடியூப்!

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிரமுக்கு போட்டியாக 60 விநாடிகள் வரையிலான வீடியோக்களில் முதன்மையாக கவனம் செலுத்தி வந்த யூடியூப் தற்போது 60 நிமிட வீடியோக்களை 3 நிமிடங்கள் வரை வழங்க முடிவு செய்துள்ளது. கூகுள் நிறுவனம் யூடியூப் ஷார்ட்ஸில் முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அக்டோபர் 15 முதல் யூடியூப் ஷார்ட்ஸில் மூன்று நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம் என்பதே அந்த மாற்றமாகும். இந்த மாற்றம் ஸ்கொயர் மற்றும் வெர்டிகல் அமைப்பை கொண்ட வீடியோக்களை மட்டுமே பாதிக்கும். மேலும் செயல்படுத்தும் தேதிக்கு முன் பதிவேற்றப்பட்ட எந்த வீடியோக்களுக்கும் இதனால் எந்த பாதிப்பும் இருக்காது. மேலும், வரும் மாதத்தில் நீண்ட ஷார்ட்ஸ்களுக்கான பரிந்துரைகளை மேம்படுத்துவதில் யூடியூப் தீவிரமாக உள்ளது. கூடுதலாக, யூடியூப் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த ஷார்ட்ஸை, டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தி மீண்டும் மறுஉருவாக்கம் செய்ய அனுமதிக்கிறது. இந்த டெம்ப்ளேட்கள் புதிய இசை மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வருகின்றன, இதனை யூசர்கள் சமீபத்திய டிரெண்ட்களுடன் பரிசோதனை செய்து கொள்ள முடியும். இந்த டெம்ப்ளேட்களைப் பயன்படுத்த, யூசர்கள் தங்களுக்கு விருப்பமான ஷார்ட்ஸில் “ரீமிக்ஸ்” என்கிற ஆப்ஷனை தேர்வு செய்து இந்த டெம்ப்ளேட்டைப் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்து இந்த தனித்துவமான அம்சத்தை பயன்படுத்த முடியும். இதையும் படிக்க: செல்போனில் சத்தம் சரியா கேக்கலையா? - இதை செஞ்சு பாருங்க… 2 மடங்கு சவுண்ட் கூடும்! வரும் மாதங்களில், ஷார்ட்ஸ் கேமரா மூலம் அணுகக்கூடிய ஓர் சிறப்பம்சத்தை யூடியூப் விரிவுபடுத்த இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த வீடியோக்களில் இருந்து மியூசிக் வீடியோக்கள், கிளிப்புகள் மற்றும் தடையின்றி ரீமிக்ஸ் செய்ய வழி செய்கிறது. இந்த புதிய அம்சம் யூசர்கள் பல்வேறு யூடியூப் வீடியோக்களில் இருந்து தங்களுக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுக்கவும், அவர்களின் விருப்பங்களை மேம்படுத்தவும், யூசர்கள் யூடியூபில் வலம் வரும் திறனை மேம்படுத்தவும் உதவும் என்று நம்புகிறது. மேலும், கூகுள் டீப் மைண்ட் மூலம் வீடியோ உருவாக்கும் மாடலான வியோ, யூடியூப் ஷார்ட்ஷில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. இமேஜினரி செட்டிங்ஸ் மற்றும் தனித்துவமான வீடியோ கிளிப்புகள் மூலம் வீடியோ தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமான வீடியோக்களை உருவாக்க இது உதவுகிறது. “குறைவான ஷார்ட்ஸ்களைக் காட்டு” என்ற புதிய விருப்பத்தை தேர்வு செய்வதன் மூலம், யூடியூப் பயனர்களின் ஹோம்பேஜில் குறிப்பிடத்தக்க ஷார்ட்ஸ்கள் மட்டுமே இடம்பெறும் ஆப்ஷனையும் யூடியூப் வழங்குகிறது. இதனை யூசர்கள் தங்களது ஹோம்பேஜில் உள்ள ஷார்ட்ஸ் அம்சத்தின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று புள்ளிகள் மெனுவைக் கிளிக் செய்வதன் மூலம், அவர்கள் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.